பெனாசிர் கொலை: ஐ.நா.விசாரணைக்குழு ராணுவ தளபதிகளை விசாரிக்க அனுமதி மறுப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை தொடர்பாக ஐ.நா.விசாரணைக்குழு விசாரித்து வருகிறது. இந்த குழுவினர் ராணுவ தளபதிகளை விசாரிப்பதற்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்களிடம் அனுமதி கேட்டது. இப்போதைய ராணுவ தளபதி கயானி, ஐ.எஸ்.ஐ. முன்னாள் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் நதீம் தாஜ், ராணுவ உளவுத்துறை முன்னாள் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அஜாஸ் மியான் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா.விசாரணைக்குழு எழுத்து மூலம் அரசாங்கத்திடம் அனுமதி கேட்டு இருந்தது. ஆனால் இதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்து விட்டது.
0 comments :
Post a Comment