துண்டாடப்படாத இலங்கை என்ற விடயத்தில் நாம் உறுதியாகவுள்ளோம். சம்பந்தன்.
துண்டாடப்படாத ஐக்கிய இலங்கை என்ற விடயத்தில் தனது கட்சி மிகவும் உறுதியாகவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் பிரதானமான இருவேட்பாளர்களுடனும் தமது கட்சி தமிழ் மக்கள் எதிர்நோக்கி நிற்கின்ற தற்கால அவசர பிரச்சனைகள் தொடர்பாகவும் , வடகிழக்கு மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன் தமது பேச்சுவார்த்தைகள் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற விடயத்தை அடிப்படையாக கொண்டதாகவே அமைந்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment