Tuesday, January 5, 2010

ஜெனரல் வர்த்தக சமுதாயத்தினரை சந்திக்கின்றாராம்.

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா எதிர்வரும் 12ம் திகதி இலங்கை வர்த்தக சமுதாயத்தினரை சந்தித்து தனது கொள்கைகளை விளக்கி அவர்களின் உதவியை வேண்டவுள்ளதாக தெரியவருகின்றது.

கொழும்பிலுள்ள மிக முக்கியமான இடமொன்றில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவிக்கின்ற எதிர்கட்சிகளின் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கான பேச்சாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com