Tuesday, January 5, 2010

ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு கோத்தபாயவே பொறுப்பு கூறவேண்டும்.

அரசினால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்ற ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு , கம்பல் பிளேசில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா நாட்டில் இடம்பெற்றுள்ள ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கான பழியை என்மீது சுமத்த முயற்சிக்கின்றபோதும் அக்கொலைகளுக்கான முழுப்பொறுப்பையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் , யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது கொலைகளை நிகழ்த்துவற்காக பாதுகாப்புச் செயலரினால் கும்பல் ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. நான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று களனிய விகாரைக்கு சென்றிருந்தபோது அங்கு துட்டகெமுனுவின் ஆட்கள் வெறுப்பூட்டும் விதமாக கூச்சலிட்டார்கள் , ஆனால் நான் பொறுமை காத்துக்கொண்டேன். பயங்கரவாதிகளுக்கு பயப்படாத நான் எந்தக்காலத்திலும் இவ்வாறானவர்களுக்கு பயப்படபோவதில்லை.

எது எவ்வாறாயினும், நான் இத்தேர்தலில் வெல்வது நிச்சயம். அப்போது இக்கொலைஞர்களுக்கான தனி இடம் ஒன்றை உருவாக்குவேன் என தெரிவித்துள்ளதுடன் முப்படைகள் , பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையின் 95% இனர் தனக்கு ஆதரவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com