Saturday, January 16, 2010

கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டமையை வீரதுங்காவின் கூற்று நிருபிக்கின்றது.

ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கா டெய்லி மிரர் பத்திரிகையின் Hot Seat க்கு வழங்கிய நேர்காணலில் இந்திய அரசுடனான அரசியல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வன்னியில் கனரக ஆயுதங்களின் பாவனை நிறுத்தப்பட்டதாக கூறியிருந்தார். அவ்வாறாயின் அவரது கூற்றிலிருந்து அவ்வொப்பந்தத்திற்கு முன்னர் இலங்கையில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதியாகின்றது என எதிர்கட்சிகளின் முக்கிய புள்ளியான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இலங்கை அரசு கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என ஐக்கிய நாடுகள் சபைக்கு பொய் அரசு கூறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்திய தேர்தல் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இந்தியாவின் தமிழ் வாக்காளர்களை கருத்தில் கொண்டு போரினை நிறுத்தி வைக்குமாறு இந்தியா கேட்டிருந்தாகவும் லலித் வீரதுங்கா குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment