Sunday, January 17, 2010

தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த ஒருவரிடமே தேசத்தை ஒப்படைக்க வேண்டும்!

அமைச்சர் பேரியல் அஷ்ரப்கடந்த முப்பது வருடங்களாக நாம் அனைவரும் எதிர்பார்த்து பிரார்த்தித்தது போன்று, சமாதானம் நிறைந்த முஹர்ரம் புதுவருடம் பிறந்திருக்கும் இந்த அருமையான பெறுமதி மிக்க சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் இவ்வருடம் அதிஷ்டம் மிக்கதாகவும் சிறப்பு மிக்கதாகவும் அமைய வேண்டும் என வாழ்த்தி இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

கடந்த முப்பது வருடங்களாக இலங்கை மக்களில் பெரும்பான்மையினர் பெரும் அச்சத்தோடு வாழ நேரிட்டது. அதிலும் குநிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் அச்சத்துடனும் பயத்துடனும் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

இதற்கெல்லாம் காரணம் புலிப் பயங்கரவாதமாகும். இப்பயங்கரவாதம் எமது பிரதேசத்தில் அடியெடுத்து வைத்த நாளில் இருந்து ஏற்பட்ட அழிவுகள் வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியாதவை. தமது கண்ணெதிரேயே எமது உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்கள் வெட்டப்பட்டும், சுடப்பட்டும், அழித்தொழிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு இரவிலும் எமது ஊரைச் சுற்நி வெடிச் சத்தங்களும், குண்டுச் சத்தங்களும் காதுகளை பிழந்து கொண்டிருந்தன.

நிம்மதியான தூக்கமின்நி நாம் எமது குழந்தைகளையும் கைக்கடக்கமான பொருட்களையும் சுமந்து கொண்டு தொங்கோட்டமும், சில்லறைப் பாய்ச்சலுமாக, சென்று பாதுகாப்பான இடங்களில் உறவினர்களது வீடுகளிலும் கழித்த இரவுகள்தான் எத்தனை?

தொழிலுக்காகவும் சொந்த தேவைகளுக்காகவும் பாதைகளில் வாகனங்களிலும் கால்நடையாகவும் பயணம் செய்தவர்கள் எத்தனை பேர் எங்களது கண்களுக்கு முன்னால் மையித்துக்களாக்கப்பட்டனர்.

ஏன் ஹஜ் செய்து விட்டு திரும்பிய ஹாஜிகள் கூட சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட காட்சியை கண்டு கண்cர் விட்டு கதநியழுத்தவர்கள் நாங்கள்.

அது மட்டுமல்ல, வீதிகளில் இறங்கி பயணம் செய்யும் போது உயிர் பநிக்கப்பட்டு விடுமோ என்ற பயம், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினால் அவர்கள் திரும்பி வீடு வந்து சேரும் வரையில் திரும்பி வராமல் கொல்லப்பட்டு விடுவார்களோ என்ற பயம், ஆஸ்பத்திரிக்கு மருந்தெடுக்க சென்றால் மீண்டும் வீடு திரும்பலாமா என்ற அச்சம், வயலுக்குச் சென்ற வாப்பாவும் காக்காவும் தம்பியும் மகனும் அறுவடையை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக வீடு வருவார்களா என்ற பீதி, தொழிலுக்காக வர்த்தக நிலையங்களுக்கும் அலுவலகங்களுக்கும் செல்லும் இரத்த உறவுகள் தீவிரவாதிகனின் குண்டடிக்கு இலக்காக்கப்பட்டு விடுமோ என்ற பயம், எந்த நேரத்தில் எவ்விடத்தில் குண்டு வெடிக்குமோ என்ற யோசனை, இவ்வாறாதன ஒரு மனப் பிரமையுடன் பயத்தையும் அச்சத்தையும் சுமந்தவர்களாகவே வாழ்ந்தவர்கள் நாங்கள், இவை ஒரு புறமிருக்க எமது சொந்த வீட்டிற்குள்ளேயாவது எங்களால் நிம்மதியாக வாழ்ந்து தூங்க முடிந்ததா? எங்களில் பலருக்கு இரவுப் பொழுதுகளை கனிக்க நேரிட்டது எங்களது வீடுகனில் அல்ல.

மாறாக சகோதரர்களினதும், நண்பர்களினதும், உறவினர்களினதும் வீடுகளிலும், பாடசாலைகளிலும், பள்னிவாசல்களிலும், அகதி முகாம்களிலும்தான் இவை எல்லாம் இரவு வேளைகளில் புலிகள் ஊருக்குள் புகுந்து எமது உயிரையும் உடமைகளையும் பநித்து விடுவார்களோ என்ற அச்சத்தினால்தான் காலங்கள நகர்ந்தன.

இவ்வாறு மரண பீதியுடன் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்த நாம் அப்போது கூநியதும் வேண்டியதும் பிரார்த்தித்ததும் இந்த மரண பயத்தில் இருந்து எப்போது விடுபடப் போகின்றோம் என்பதையும் எப்போது நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என்பதையும்தான்.

அது மட்டுமல்லாது எமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வீட்டில் வேலை செய்வது எப்போது, வயலில் வேலை செய்யப்போன தமது உறவுகளைப் பற்நிய பயமில்லாமல் நிம்மதியாக எமது அலுவல்களை மேற்கொள்வது எப்போது, இரவு நேரங்களில் அடுத்தவர்களது வீடுகளிலும் அகதி முகாம்களிலும் தூங்காமல் எமது வீட்டில் நிம்மதியாக தூங்குவது எப்போது என்ற பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருந்தோம்.

இந் நிலையில்தான் கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வந்தது. அன்று முழு நாடும் அத்தேர்தலில் போட்டியிட்டவர்களிடம் கேட்டுக் கொண்டது என்னவென்றால், இந்த தீவிரவாதத்தின் கொடூரத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்து மக்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தர வேண்டும் என்பதைத்தான் அப்போது நான் அன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவரும் அப்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களை உங்களிடம் அழைத்து வந்து `ங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பயங்கரவாதத்தை அழிக்கும் சக்தி அவரிடம்தான் இருக்கிறது என்பதை கூநி உங்களின் முன்னிலையில் அவரிடம் இந்த வேண்டுகோளை உங்கள் சார்பாக விடுத்து பயங்கரவாதத்தை அழிப்பது என்ற வாக்குறுதியையும் உங்களுக்கு அவரிடம் இருந்து பெற்றுத் தந்தேன்.

அன்று நான் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களைத் தெரிவு செய்வதற்கு காரணம் இந்தப் பயங்கரவாதத்தை பேச்சுவாரத்தை மூலமாகவோ அல்லது யுத்தத்தின் மூலமாகவோ முடிவுக்குக் கொண்டுவரும் ஆளுமை அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கனிடம் மட்டும்தான் இருக்கிறது என்பதை நான் அறீந்திருந்ததனாலாகும்.

இதனால்தான் நான் அவரை உங்கள் முன் நிறுத்தி அவரிடம் உங்களுக்கு இவ்வாக்குறுதியைப் பெற்றுத் தந்தேன். என்றாலும் நீங்கள் எனக்கும் அவருக்கும் பூரண ஒத்துழைப்பைத்தருவதில் குறை செய்தீர்கள்.

எனினும் அல்லாஹ் நாங்கள் கை ஏந்திக் கேட்ட பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அப்பிரார்த்தனைக்கான தீர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நடாத்திக் காட்டினான்.

அதுதான் அன்று நாம் அவரை உங்கனிடம் அழைத்து வந்து பெற்றுத் தந்த வாக்குறுதியை காப்பாற்றும் வண்ணமும், நாம் அவரிடம் கண்ட ஆளுமையை நிறைவேற்றும் முகமாகவும், அவர் நாட்டைப் பொறுப்பேற்று மூன்றரை வருடங்கனில் அல்லாஹ்வின் உதவியுடன் எமக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவு செய்துள்ளார்.

இதன் மூலம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அடியோடு பிடுங்கி முற்று முழுதாக இல்லாமல் ஒழித்து சுதந்திரமான ஒரு நாட்டை எமக்காக உருவாக்கியுள்ளார். இப்போது எமக்கிருந்த பெரியதொரு பிரச்சினை முற்று முழுதாக ஒழிந்து விட்டது.

நாம் பாதையில் இறங்கி நடப்பதற்கும். அலுவலகங்களுக்கும் வியாபாரஸ் தலங்களுக்கு செல்வதற்கும், வயலுக்கு வேளாண்மை செய்ய செல்வதற்கும், பிள்ளைகளை பாடசாலைக்கு பயமின்நி அனுப்புவதற்கும், வீடு வாசல்கனில் நிம்மமதியாக அச்சமின்நிபடுத்துறங்கவும், சுமுகமான நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த சுமுக நிலையை ஏற்படுத்துவதற்காக எமது ஜனாதிபதி பல தியாகங்களையும் கஷ்டங்களையும் கடக்க வேண்டியிருந்ததுடன் பெருமளவு பணத்தையும் செலவு செய்ய வேண்டியிருந்தது.

எம் அனைவருக்கும் வெள்னிடை மலை. ஆனாலும் இந்த சந்தர்ப்பத்தில் கூட ஜனாதிபதியவர்கள் எமக்கு அபிவிருத்திகளை தருவதில் பின்னிற்கவில்லை.

எமது பிரதேசத்தின் பாதைகள் எல்லாம் காபட் இடப்பட்டும் கொங்கிaட் இடப்பட்டும் புனர்நிர்மாணம் செய்யப்படுகின்றன. விவசாயத்திற்கு உயிர்நாடியான பசளை 350 ரூபாவிற்கு வழங்கப்படுகிறது. ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

கொழும்புக்கு செல்லும் தாஅட்ட வங்கு வீதி புனர் நிர்மாணம் செய்யப்படுகிறது. மட்டக்களப்பூடாக கொழும்பு செல்லும் வீதி புனரமைக்கப்படுகிறது. காலிக்குச் செல்லும் வீதியின் நிர்மாணம் நிறைவடைந்துள்ளது. இதனால் எமது பிரயாண நேரம் குறைக்கப்பட்டு சொகுசான பயணம் கிடைக்கப்பெற்றுள்ளது.

பல அரசாங்கக் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைகள் பலவும் உயர் மட்ட நிலையில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன் எமது நோயாளர்கள் வெளி வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படும் அவலம் பெருவாரியாக குறைக்கப்பட்டு சிகிச்சைகள் எமது பிரதேசத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

செய்கை பண்ண முடியாமல் இருந்த எமது வயற்காணிகனில் பாசன வசதிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயம் செய்கை பண்ணப்படுகின்ற.

பல அரச கட்டிடங்கள் பல்தேவை கட்டிடங்கள் பாடசாலைக் கட்டிடங்கள் சிறுவர் பூங்காக்கள் என பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.

மேலும் எமது பிள்ளைகளுக்கு நல்லதோர் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டு கணணிக் கல்வியும் முக்கியத்துவப்படுத்தப்பட்டு திறமையுள்ளவர்களாக அவர்களை வளர்த்தெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஜனாதிபதியவர்கள் எமது பிரதேசத்திற்கு செய்த அபிவிருத்திப் பணிகளை கூநிக்கொண்டே செல்லலாம்.

எனவே இம்முறை நாம் உங்கனிடம் ஆதரவை கேட்பது சொன்ன வாக்குறுதியை நிறைவேற்நிய பயங்கரவாதத்தை ஒழித்து நிம்மதியை தந்த ஜனாதிபதிக்கேயாகும்.

ஆனால் இன்று அவருக்கு எதிராக போட்டியிடுவர் எப்படிப்பட்டவர் என்றால் ஜனாதிபதி மஹிந்த அவர்கனின் உதவியோடும் நம்பிக்கையோடும் நாட்டின் பொறுப்புக்களை எடுத்து அதன் பின்னர் அந்த நம்பிக்கையை துண்டு துண்டாக உடைத்து அவருக்கு எதிராக செயற்படுபவராகும்.

அது மட்டுமின்நி இரகசியங்கள் பரகசியங்கள் அனைத்திலும் ஜனாதிபதியுடன் கைகோர்த்து சேவையாற்நிய பின்னர் தனது சுய விருப்பங்கள் நிறைவேற்றப்படாததற்காக தன்னுடைய பதவிக்காலம் முடிந்த பின்னரும் அப்பதவியை நீளப்படுத்தி நாட்டிற்கு சேவையாற்ற இடமளித்த ஜனாதிபதி மீதே குற்றம் சுமத்தி பழி போடுகிறார் என்றால் ஆட்சிக்கு வந்த பின்னர் யாரென்றே தெரியாத எமக்கு இவர் என்ன செய்வார்?

இதுதான் ஒரு நாட்டை பொறுப்பேற்கப் போகும் ஒரு தலைவருக்குரிய பண்பா? எமது மறைந்த மலைவர் அஷ்ரபிடம் இருந்து தலைத்துவப் பண்புகளை கற்றுக் கொண்டவர்கள் நாங்கள்.

தலைவர் எப்போதாவது சொன்னதை மறுத்திருக்கிறாரா? யாருடனாவது கூடவே இருந்து அவருக்கு குழி தோண்டி இருக்கிறாரா?

எனவே இவ்வாறான தலைமைத்துவப் பண்புகள் இல்லாத ஒரு நபரிடம் நாட்டை தாரை வார்க்கலாமா? அது மட்டுமன்நி பதவியில் இருக்கும் போது முஸ்லிம்களாகிய எமக்கு எதிராக குரல் எழுப்பியவர் இவர் தற்போது பதவியில்லாமல் இருக்கும் போது தான் சொன்னதை மறுக்கிறார். இவர் மீண்டும் பதவிக்கு வந்தால் எமக்கு என்னவெல்லாம் செய்வார் சிந்தித்தீர்களா?

எனவே அன்பார்ந்த சகோதரர்களே இந்த ஜனாதிபதித் தேர்தலில் சரியானதொரு முடிவை எடுத்து மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கனிடம் நாட்டை ஒப்படைத்து வளமான எதிர்காலத்திற்காக ஒன்றுபட்டு வாக்கனிப்போம்.


No comments:

Post a Comment