Tuesday, January 5, 2010

பிரித்தானியா இலங்கைக்கான பயணத்தடையை தளர்த்தியுள்ளது.

பிரித்தானியப் பிரஜைகள் இலங்கையின் வட - கிழக்கு பிரதேசங்களுக்கு பிரயாணம் செய்வது ஆபத்தானது என விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயரிஸ்தானிகர் டாக்டர் பீற்றர் ஹெய்ஸ் தெரிவித்துள்ளார்.

தாம் அண்மையில் யாழ்பாணம் மற்றும் கிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்து மேற்கொண்ட கணிப்புக்களின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர் கடந்தகாலங்களில் காணப்பட்ட பாதுகாப்பின்மை காரணமாக அப்பிரதேசங்களுக்கான தடையை விதிக்க நேரிட்டிருந்தாகவும் கூறியுள்ளார்.

அதேநேரம் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யும் பிரயாணிகள் விமானம் மூலமும் , இலங்கைப் பாதுகாப்பு அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாதைகளுடாகவுமே பயணிக்கவேண்டும் என தனது நாட்டு பிரஜைகளையும் வெளிநாட்டுப் பிரஜைகளையும் வேண்டியுள்ளனர்.


No comments:

Post a Comment