Wednesday, January 27, 2010

தேர்தல் முடிவுகளை ஜெனரல் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ள அவர், இத்தேர்தல் முடிவுகளை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு 10 காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயத்தினை சினமொன் லேக்சைட் ஹோட்டலில் இருந்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த அவர், தனது வெற்றி மோசடிமூலமாக பறிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பினை நீக்கி தன்னை கொலை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தான் கருதுவதாக தெரிவித்துள்ள அவர், தனது பாதுகாப்புப் பிரிவில் அடங்கியிருந்த மோட்டார் சைக்கிள் பிரிவினரை வாபஸ் பெற்றுள்ளனர் எனவும் அவர்களை நடுவெயிலில் முழங்காலிடவைத்து கைவிலகுங்கள் போட்டு இங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நிலைமைகள் மோசமைடைந்தால் என்ன செய்வீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்டபோது, Do or Die எனும் நிலையிலேயே உள்ளேன். எதிராக போராடவேண்டும் அல்லது சரணடையவேண்டும். இரண்டில் ஒன்று இடம் பெறும் என தெரிவித்துள்ளார்.

தான் தங்கயிருக்கும் ஹோட்டைலைச் சுற்றி 1000 இராணுத்தினரும் 500 பொலிஸாரும் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment