விடுதலை செய்யப்பட்டுள்ள பா.உ கனகரத்தினம் நிர்பந்தந்திற்கு உள்ளாகியுள்ளார். ரிஎன்ஏ
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த எட்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் இவ்வாரம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சண்ரே ரைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
பா.உ கனகரத்தினத்திற்கு மன்னார்வீதி, வவுனியாவிலுள்ள வடமாகாண ஆழுனர் அவர்களின் வதிவிடவளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளதுடன் , அனர்த்த நிவாராண மற்றும் மீழ் குடியேற்ற அமைச்சுக்கு சொந்தமான வாகனமும் பொலிஸ் பாதுகாப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள குறிப்பிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், கனகரத்தினம் எம்பி தமது சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்விடயங்களை தெரியப்படுத்தியதாக கூறியுள்ளார்.
கனகரத்தினம் எம்பியின் மகன் கொழும்பில் புலிகளால் நாடாத்தப்பட்ட வான்தாக்குதல் ஒன்றுடன் தொடர்புபட்டிருப்பதாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment