இஸ்ரேலுடன் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு தயார்: பாலஸ்தீன பிரதமர் அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பாலஸ்தீன பிரதமர் முகமது அப்பாஸ் கூறுகையில், ``இஸ்ரேலுடன் மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்க பாலஸ்தீனம் தயாராக இருக்கிறது. ஆனால், எல்லைகள் வரையறை, அகதிகள் விவகாரம் போன்ற பிரச்சினைகள் குறித்து ஒரு குறிப்பிட்ட இலக்குகளை கொண்டவுடன்படிக்கையை ஐ.நா.சபை நிர்ணயிக்க வேண்டும். அதன் மூலமாக, ஒரு அரசியல் தீர்வை நாம் எட்ட முடியும்'' என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment