தேர்தல் விவகாரத்தில் நாம் நடுநிலைமையையே வகிக்கின்றோம் என்கின்றது அமெரிக்கா.
நோர்வே பெரும் சீற்றம்.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலில் தாம் நடுநிலமையிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்கா ஒரு தரப்பிற்கு ஆதரவு வழங்குவதான குற்றச்சாட்டுக்களை வன்மையாக கண்டித்துள்ளது.
மேலும், அமெரிக்க அரசாகங்கம் எவர் வென்றாலும் இலங்கையுடனான தமது நெடுங்கால உறவை பேணும் எனவும், இந்நாட்டின் அமைதிக்கும், அபிவிருத்திக்கும், ஜனநாயகத்திற்குமாக தொடர்ந்து தனது பங்களிப்பதை செலுத்தும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோர்வே சீற்றம்.
அதே நேரம் அரசின் பக்கம் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை எதிர்கட்சியிகள் வேட்பாளர் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக நோர்வே அரசாங்கம் பணஉதவி செய்துள்ளது என வெளியாகிய செய்தியை இலங்கைக்கான நோர்வே தூதரகம் மறுத்துள்ளது.
குறிப்பிட்ட குற்றச்சாட்டானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும் , ஏற்றுக் கொள்ளமுயாததுமானது என தூதரக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதுடன் நோர்வே அரசு பிறிதொரு நாட்டின் தேர்தலில் தலையிடமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் எம்பி எம்.முஸம்மிலை ஜெனரல் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக 30 கோடி பணம் வழங்கப்பட்டதாகவும் , அப்பணம் நோர்வே அரசாங்கத்தினாலேயே வழங்கப்பட்டதாகவும் நேற்று முஸம்மில் ஊடகவிலாளர் மாநாட்டில் தெரிவித்ததை தொடர்ந்தே மேற்படி மறுப்பறிக்கைகள் வெளிவந்துள்ளனன.
0 comments :
Post a Comment