Friday, January 15, 2010

தேர்தலில் போட்டியிடும் பிக்கு வேட்பாளர் ஜனாதிபதியை ஆதரிக்க முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ட்டிரக்டர் சின்னத்தில் போட்டியிடும் ‘ஜனசெத பெரமுன’ கட்சியின் வேட்பாளர் வண. வத்தறமுல்ல சீலரத்ன தேரர் ஜனாதிபதியை ஆதரிக்க முன்வந்துள்ளார். பத்தரமுல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த ஜனாதிபதிக்கு எதிர்வரும் 26ம் திகதி நன்றிக்கடன் செலுத்த வேண்டும்.

ஜனசெதபெரமுன ஜனாதிபதிக்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் மனோகணேசன், ரவூப் ஹக்கீம் போன்றோர் நாட்டை துண்டாட முனைபவர்களுடன் சில பிக்குகள் ஆதரவு வழங்குவது துரதிர்ஷ்ட வசமானதெனக் கூறினார்.

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையினரது வீரமிக்க செயற்பாடுதான் பயங்கரவாதத்தை முறியடிக்க உதவியது.

அதேநேரம் ராஜபக்ஷ சகோதரர்களின் அயராத உழைப்பும் பயங்கரவாதத்தை ஒழிக்க பேருதவி புரிந்துள்ளது. உள்ளூர், வெளிநாட்டுச் சக்திகள் இன்னும் நாட்டை அழிக்கவே முயன்று கொண்டிருக்கின்றனவென்றும் சீலாரெட்ன தேரர் சுட்டிக் காட்டி னார்.

No comments:

Post a Comment