Thursday, January 7, 2010

கேபி யின் பணம் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுகின்றது. சோமவன்ச

யாழ் நிலைமைகளை கண்டபோது என் கண்களில் கண்ணீர் வடிய தொடங்கியது.
புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என தன்னை அறிமுகப்படுத்தியிருந்த கே.பி யின் பணமே தற்போது மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இன்று இடம்பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா சார்பான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசுகையில் , கே.பி தாய்லாந்த நாட்டில் பன்னெடுங்காலங்களாக தங்கியிருந்தாகவும் , அவருக்கு அந்நாட்டில் அன்று பிரதமந்திரியாகவிருந்த தக்சின் சினவத்ர வுடன் நல்ல உறவு இருந்தாகவும் தெரிவித்ததுடன், இன்று அரச பாதுகாப்பில் உள்ள கேபி யின் ஆலோசனையின் பேரிலே அரசாங்கம் தக்சின் சினவத்ர வை இலங்கையின் பொருளாதார ஆலோசகராக நியமிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துடன் , தாய்லாந்தின் முழு பொருளாதாரத்தையும் சுரண்டிய மோசடியின் பெயரால் பதவிவிலக்கப்பட்டவர்களுடனே ராஜபக்ச அரசாங்கம் தொடர்புகளை பேணி வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் இந்நாடு இலங்கை மக்கள் அனைவருக்கும் சொந்தானதோர் நாடாகும், இங்கே அனைவரும் சம உரிமையுடன் வாழக்கூடிய நிலைமை உருவாக வேண்டும். இந்நாடு சிங்கள மக்களுடையது என்றால் தமிழ் மக்கள் கடலில் குதிப்பாதா?
நாம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்பாணம் சென்றிருந்தோம். அத்தேசம் சந்தித்திருக்கின்ற அழிவுகளைக் கண்டபோது என்கண்களில் கண்ணீர் வடிய தொடங்கியது. சாதாரணமாக மனிதாபிமானமுள்ள எந்தவொரு மனிதனதும் கண்களில் அந்நிலைமைகளை பார்த்தால் கண்ணீர்வரும்.

அத்துடன் நாட்டில் தொடர்ந்தும் சோதனைச்சாவடிகள் காண்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர் யுத்தம் முடிவுற்றுள்ள நிலையில் யாரைப் பிடிப்பதற்கு இச்சோதனைச் சாவடிகள் என வினவினார்.

ஏதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் தொடர்பாக பேசிய மோமவன்ச, ஜெனரல் பொன்சேகா முதிர்சியடைந்த ஓர் தலைவராகும். இந்நாட்டில் 30 வருடங்கள் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் அவர். இன்று நாட்டின் அபிவிருத்தியில் அக்கறை கொண்டு அரசியலுக்கு வந்திருக்கின்றார். இந்நாட்டினை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கைப் பிரஜைகள் சகலரிடம் இருந்தும் ஆதரவினைக் கோரியிருக்கின்றார். அவருடைய முதிர்சி என்பது பிரபாகரனது பெற்றோர் இந்நாட்டின் அபிவிருத்திக்கு உதவி செய்ய முன்வந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என தெரிவித்திருந்தன் மூலம் அவருடைய முதிர்ச்சியையும் இந்நாட்டின் அனைத்து மக்களையும் சமமாக மதிக்கும் தன்மையை எடுத்துக்காட்டியிருந்தது. ஆனால் அவரது இக்கருத்தினை இனவாதிகள் விமர்சித்ததுடன் இக்கருத்தினை அடிமட்ட சிங்களமக்களிடம் கொண்டு சென்று மீண்டும் இனவாத பூதத்தை தட்டியெழுப்ப முனைகின்றனர். ஆனால் எதிர்வரும் தேர்தலில் மக்கள் தகுந்தபாடத்தை அளிப்பர் எனவும் கூறினார்.


No comments:

Post a Comment