Thursday, January 14, 2010

ஜனாதிபதி , பிரதமரின் பொங்கல் வாழ்த்துக்கள்.

பொங்கல் திருநாளில் சமாதானம், சுபீட்சம், புரிந்துணர்வு ஏற்பட பிரார்த்திப்போம் - ஜனாதிபதி

இலங்கை வாழ் அனைத்து இந்துக்க ளுக்கும் எனது மகிழ்ச்சிகரமான தைப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப் பதோடு எம்மிடையே சமாதானமும் சுபீட்சமும் புரிந்துணர்வும் நம்பிக்கையும் ஏற்பட பிரார்த்திப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை வாழ் இந்துக்கள் உலகெங்கிலும் பரந்து வாழும் தமது இந்து சகோதரர்களுடன் சேர்ந்து இலங்கையின் பிரபல மான இந்துப் பண்டிகையான தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இவ் வேளையில் சுமார் மூன்று தசாப்தங்களாக அவர்களின் பெரும்பாலானவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த சுதந்திரத்தை அனுபவிக்கக் கிடைத்திருப்பது அவர்களது மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணமாய் அமைகிறது.

இந்துக்களின் பஞ்சாங்கத்தில் மிக விசேடமான ஒரு பண்டிகையான தைப்பொங்கல் மரபுகளையும் கிரியைகளையும் இந்துக்கள் தொடர்ந்தும் அனுஷ்டித்து வருகின்றனர்.

இரண்டு வகையில் புனித மாகக்கருதப்படும் இத்தினம் சிறந்த அறுவடையை எதிர்பார்த்தும் விவசாயிகள் தமது கடின உழைப்புக்குப் பின்னர் பெற்ற அறுவடைகளுக்காகவும் அதை அளித்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.

இலங்கையின் எல்லா பாகங்களிலும் பரவலாகக் கொண்டாடப்படும் தைப் பொங்கல் பண்டிகையின்போது இந்துக்கள் தமது பாரம்பரிய கலாசார மரபுகளை அனுஷ்டித்து, அவற்றுக்கு தம்மை அர்ப் பணித்து, எதிர்காலம் குறித்தும் எமது சமூகத்தின் அமைதி, சுபீட்சம், புரிந்துணர்வு ஏற்படவும் சாதகமான எதிர்பார்ப்புகளை வைக்கின்றனர். இது எமது சமூகத்தின் பண்மைத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

இன்றைய தைப்பொங்கல் தினத்தில் எமது இந்து சகோதரர்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கைதரும் எதிர்பார்ப்புகளை வைப்பதற்கும் வென்றெடுக்கப்பட்டுள்ள சமாதானத்திற்காக நன்றி செலுத்தவும் தங்களது குழந்தைகளுக்குப் போன்றே முழு இலங்கையர்களுக்கும் புதியதோர் இலங்கையை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமைக்காகவும் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.

மக்கள் மத்தியில் புரிந்துணர்வை வளர்க்கும் தினமாக அமையட்டும். பிரதமர்
தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் இந்து மக்கள், அமைதியுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதற்கு விரும்பும் மக்கள் சமூகமாகும். நாட்டில் வாழும் சகல சமூகங்கள் மத்தியிலும் அன்னியோன்யத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்கும் தினமாக இந்நாள் அமையட்டுமென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் தினத்தையிட்டு பிரதமர் விடுத்துள்ள செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இன்று பாரம்பரியத்தின்படி தைப்பொங்கலானது வருடத்தின் முதல் நாளாகிறது. இதனால் இத்தினம் மன மகிழ்வு மிக்கதொன்றாகிறது. அத்துடன் இது உழவர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் இந்து சமயத்தவர்கள் தமது முதல் அறுவடையை தெய்வத்திற்குப் படைத்து பூசை வழிபாடுகளை மேற்கொள்வர்.

தமது விவசாயத்திற்கு உறுதுணையான சூரியக் கடவுளை நினைத்து பொங்கல் பொங்கி மகிழ்வர். அதேபோன்று உழவுத் தொழிலுக்கு உதவும் மாடுகளுக்கென விசேட மாட்டுப் பொங்கலையும் கொண்டாடுவர். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் சகல மாகாணங்களிலும் வாழும் தமிழ் மக்களுக்கு இம்முறைத் தைப்பொங்கல் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைகிறது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களும் இம்முறை தைப்பொங்கல் விழாவைக் கொண்டாட சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை மகிழ்ச்சி தரக் கூடிய விடயமாகு மெனவும் பிரதமர் தமது தைப்பொங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com