தேர்தல் வன்செயல்கள் தொடர்பாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அமைதியான தேர்தல் ஒன்றை வேண்டுகின்றது.
எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்களின் நிமிர்த்தம் இலங்கையில் இடம்பெறுகின்ற தேர்தல் வன்முறைகள் தொடர்பாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. நேற்று தெனியாய பிரதேசத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்வண்டி ஒன்று மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தும் சுமார் 10 காயமடைத்ததையும் தொடர்ந்து ஐ.நா வின் இச்செய்தி வெளிவந்துள்ளது.
ஐ.நா வின் பேச்சாளர் மார்டின் செசிக்கி , இலங்கையில் தேர்தல் பிரச்சாரங்களின்போது இடம்பெற்றுள்ள வன்செயல்கள் தொடர்பான முழு அறிக்கை ஒன்றை வேண்டியுள்ளதுடன், இவ்வாறான சம்பவங்கள் மிகவும் கவலை தரக்கூடியவை எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அமைதியான தேர்தல் ஒன்றை வேண்டுகின்றது.
இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்லை அமைதியாக இடம்பெற அனுமதிக்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வேண்டியுள்ளது. நேற்று தங்காலையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகச் சம்பவத்தை அடுத்து தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், மேற்படி சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்றதோர் விசாரணையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட திணைக்களைங்களை கேட்டுக்கொண்டுள்ளதுடன், தேர்தலில் தாம் விரும்பும் வேட்பாளர்ளை ஆதரிக்கும் ஜனநாயக உரிமையினை காப்பாற்றுமாறும் வேண்டியுள்ளது.
3 தசாப்தகாலங்களுக்கு பின்னர் ஐக்கியப்படுத்தப்பட்டுள்ள இலங்கையில் இடம்பெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்தல் மிகவும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் இடம்பெறவேண்டும் என பலரும் எதிர்பார்கின்றனர் எனவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment