புத்தளம் பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம். ஓருவர் பலி ஐவர் காயம்.
மதுரங்குளிய பிரதேசத்தில் இடம்பெறவிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தவர்கள் மீது குழுவொன்று மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தோரில் மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் எதிர்கட்சிகளின் ஆதரவாளர் ஒருவர் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று அரச தரப்பின் ஆதரவாளர் ஒருவர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. தேர்தல் வன்முறைகள் இவ்வாறு அதிகரித்து செல்கின்றமை பல ஸ்தாபனங்களினதும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
0 comments :
Post a Comment