Thursday, January 7, 2010

கூட்டமைப்பின் தீர்மானத்தினால் பாதிப்பு ஏற்படப் போவதில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பதற்குத் தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் கூட்டமைப்பின் தீர்மானத்தினால் எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலை யத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் மேலும் கூறியதாவது:-

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று மூன்று குழுக்களாகப் பிரிந்து காணப்படுகின்றது. பெரும் பிளவுகள் காணப்படு கின்றன.

சம்பந்தன் தலைமையில் ஒருசிலர் சரத் பொன்சேகாவை ஆதரித்த போதும் அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கே ஆதரவுகளை வழங்குகி ன்றனர். இந்த நிலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

No comments:

Post a Comment