Tuesday, January 12, 2010

ஏ9 வீதியூடாக தனியார் பஸ்களுக்கு அனுமதி இல்லை.

ஏ9 வீதியூடாக தனியார் பஸ்கள் பயணம் செய்வதற்கு அரசாங்கத்தினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என தனியார் பஸ் சேவைகள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜெரத்ன தெரிவித்துள்ளார். அதே நேரம் சில பஸ்கள் சட்டவிரோதமாக இயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ் பஸ் வண்டிகள் அரசில் உள்ள சக்தி வாய்ந்த அமைச்சர்களுடையது என தெரியவருகின்றது.

அதேநேரம் ஏ9 பாதை 24 மணித்தியாலயம் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து யாழ் கொழும்பு சேவை மிகவும் இலகுவாகியுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபை முகாமையாளர் பி.ஏ லிவினிஸ், ஏ9 வீதியூடாக பகலில் மாத்திரம் பயணம் செய்யமுடியும் என கட்டுப்பாடு இருந்த காலத்தில் கொழும்பிலிருந்து இரவு வேளைகளில் புறப்பட்டு பகலில் ஏ9 வீயூடாக பணயம் செய்துள்ளதாகவும், தற்போது பஸ்கள் கொழும்பிலிருந்த எந்த நேரத்திலும் புறப்படக்கூடிய நிலை தோன்றியுள்ளதாக கூறியள்ளதுடன் , கொழும்பிலும் யாழ்பாணத்திலும் பஸ்வண்டி ஆசனங்களுக்கான முற்பதிவு செய்யும் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்விடங்களிலிலருந்து தற்போது பஸ்கள் நிறைந்தவுடன் நேரக்கட்டுப்பாடு இல்லாமல் புறப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment