ஏசியன் றிபியூண் இணையத்தளத்திற்கு அரசு மாதாந்தம் 7500 ரனள வழங்குகின்றது. விமல்
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க நேற்று (05) பாராளுமன்றில் பேசுகையில் , ஏசியன் றிபியூண் இணையத்தளம் ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிராக பொய்யான புனைக்கதைகளை எழுதி வருவதாகவும், அதற்கு காரணம் அவ்விணையம் அரசினால் மாதாந்தம் 7500 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டு இயக்கப்படும் இணையமாகும் என தெரிவித்துள்ளார்.
பா.உ விமல் ரத்நாயக்க தனது குற்றச்சாட்டுக்கு சான்றாக , இணையத்திற்கான கொடுப்பனவு தொடர்பாக அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் பேர்னாட் குணத்திலக, வெளிவிவகார அமைச்சின் அன்றைய செயலாளர் பாலித்த கோகன்னவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதியை காண்பித்துள்ளார்.
பேர்னாட் குணதிலகவினால் வெளிவிவகார அமைச்சின் செயலருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், கடந்த 06ம் திகதி தொலைபேசியில் பேசியது போல் அமெரிக்க வங்கிஒன்றிலிருந்து சுவிடனுக்கு பணத்தை அனுப்புவது கடினமாகையால் , இலங்கையில் உள்ள வங்கி ஒன்றினூடாக பெப்ரவரி மாத நிலுவையுடன் சேர்த்து மாதாந்தம் 7500 அமெரிக்க டொலர்களை அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment