Tuesday, January 26, 2010

வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம். 70 - 80 விழுக்காடு பேர் வாக்களித்துள்ளனர்.

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு இன்று இடம்பெற்ற தேர்தல் ஏனைய தேர்தலுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த வன்முறைகளுடன் நிறைவு பெற்றதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் 70 - 80 விழுக்காடு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் வடகிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் மிகவும் குறைந்தளவு வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்கு அரசு திட்டுமிட்டு சம்பவங்களை நிறைவேற்றியுள்ளதாக எதிர்கட்சிகள் மற்றும் சில சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில் 114 வன்முறைகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவற்றில் கண்டி மாவட்டத்தில் அதிகூடிய வன்முறைகள் (19) பதிவாகியுள்ளது. அடுத்து பொழும்பு மாவட்டத்தில் 16 வன்செயல்களும், ஹம்பகா மாவட்டத்தில் 12 வன்செயல்களும் பதிவாகியுள்ளன. இவ்வன்முறைகள் தொடர்பாக அவ்வப்பிரதேசங்களுக்கான தெரிவத்தாட்சி அலுவலர்கள் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக எவ்வித எதிர்வுகூறல்களுக்கும் இடமில்லாதவாறு வாக்களிப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment