Monday, January 4, 2010

3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கை அணி வங்காளதேசத்தை வீழ்த்தியது

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி டாக்காவில் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது.

முகமது அஷ்ரபுல் 75 ரன்கள் அடித்தார். மகமதுல்லா 54 ரன்களும், இக்பால் 40 ரன்களும் சேர்த்தனர்.

அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தில்சான் 104 ரன்களும், சங்கக்கரா 74 ரன்களும் குவித்தனர். சமரவீரா ஆட்டம் இழக்காமல் 41 ரன்கள் அடித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com