Saturday, January 2, 2010

ஜெனரல் பொன்சேகா உட்பட எதிர்கட்சிகளின் பிரதானிகள் 3 விமானங்களில் யாழ் சென்றனர்.

(இரண்டாம் இணைப்பு படங்களுடன்) ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவின் வடமாகாணத்திற்கான தேர்தல் பிரச்சாரங்களின் முதற்கட்டம் யாழ் நகரில் ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை எக்ஸ்போ லங்காவிற்கு சொந்தான 1ம் விமானத்தில் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க , ஐக்கிய தேசியக் கட்சியின் பா.உ ரவி கருணாநாயக்க தலைமையில் சில முக்கியஸ்தர்களும் , சிறிலங்கா விமானப்படையின் பயணிகள் விமானச் சேவைக்கு சொந்தமான வை12 ரக 2ம் விமானத்தில் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் மனோ கணேசன் , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் உட்பட்ட ஒரு குழுவும் , சிறிலங்கா விமானப்படையின் பயணிகள் விமானச் சேவைக்கு சொந்தமான வை12 ரக 3ம் விமானத்தில் ஜேவிபியின் தலைவர் அமரவன்ச வுடன் ஜெனரல் பொன்சேகா யாழ் சென்றடைந்துள்ளார்.

1ம் , 2ம் விமானங்களில் பலாலி விமானநிலையத்தை சென்றடைந்த எதிர்கட்சிகளின் பிரமுகர்களால் ஜெனரல் பொன்சேகா வரவேற்கப்பட்டதாக பலாலி தகவல்கள் தெரிவிக்கின்றன. பலாலி விமான நிலையத்தில் விடுமுறையில் ரத்மலானை நோக்கி புறப்பட காத்திருந்த படையினருக்கு கையசைத்தவாறு விமான நிலையத்தைவிட்டு உடனடியாக வெளியேறிய ஜெனரல் பொன்சேகா நேரடியாக நல்லூர் கந்தன் தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

யாழ்பாணத்திற்கான தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாக ஜெனரல் பொன்சேகாவின் ஊடகப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றிருந்த எதிர்கட்சிகளின் கூட்டு முன்னணியினருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களும் இணைந்திருந்தாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட இக்குழுவில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் திறைசேரியின் முன்னாள் கணக்காளர் நிகால் சிறி அமரசேகர ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலதிக தகவல்கள் தொடரும்.








No comments:

Post a Comment