Thursday, April 1, 2010

1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகம் தோன்றியது எப்படி?

விஞ்ஞானிகள் ஆய்வில் வெற்றி புரோட்டான் கதிர்களை மோத செய்து சோதனை ஜெனீவா,
உலகம் எப்படி தோன்றியது? அதில் உயிர்கள் எப்படி உருவாயின? என் பதைவிஞ்ஞானிகளால் இதுவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. வானத்தில் அணு குண்டுகளை விட பல லட்சம் மடங்கு சக்தி வாய்ந்த ஏதோ இரு பொருட்கள் பயங்கரமாக மோதியிருக்க வேண்டும்.

அதில் ஏற்பட்ட மாற்றத்தில் தான் உலகம் உருவாகி இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த மோதல் சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந் திருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர்.

உலகில் உள்ள ஒவ் வொரு பொருட்களுமே அணுக்களால் ஆனவை. ஒவ்வொரு அணுவும் மற்றொரு அணுவை ஏற்றுக் கொண்டு பொருட்களாக காட்சி அளிக்கின்றன. ஒரு அணு மற்றொரு அணுவுடன் ஒட்டிக் கொள்ள பசை போன்ற ஏதோ ஒரு மர்ம பொருள் உதவுகிறது.

அந்த மர்ம பொருள் எது? அது எப்படி உருவாகிறது என்பதை கண்டு பிடித்து விட்டால் உலகம் தோன்றியதையும், உயிர்கள் தோன்றியதையும் கண்டு பிடித்து விடலாம்.

இதற்கான ஆராய்ச்சியில் சர்வதேச விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதை கண்டுபிடிக்க வேண்டுமானால் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது போல ஒரு மோதலை செயற்கையாக உருவாக்கி ஆய்வு நடத்துவது என்று முடிவு செய்தனர்.

இதற்காக அணு பொருளான புரோட்டான் கதிர்களை மோதவிட்டு சோதனை செய்வது என்று திட்டமிட்டனர். புரோட்டான் கதிர்களை மோத செய்தால் அது சக்தி வாய்ந்த 2 அணு குண்டுகளை மோத விடும் போது ஏற்படுவது போன்ற சக்தி வெளிபடும். அப்போது அந்த மர்ம பொருளை கண்டு பிடித்து விடலாம் என கருதினார்கள்.

இந்த சோதனையை நடத்துவதற்காக பிரான்சு- சுவிட்சர்லாந்து நாட்டு எல்லை பகுதியில் பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழமான இடத்தில் 27 கிலோ மீட்டர் நீளத்துக்கு வட்ட வடிவில் சுரங்கப்பாதை அமைத்தனர். அதில் இரு முனையில் இருந்து புரோட்டான் கதிர்களை எதிர் எதிரே அனுப்பி மோத செய்வதற்கான கருவிகளையும் அமைத்தனர்.

இதன் பணிகள் அனைத்தும் முடிந்து 2008-ம் ஆண்டு இதன் சோதனையை தொடங்கினார்கள். அப்போது இரு முனைகளில் இருந்து புரோட்டான்களை அனுப்பி 2.36 டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட் வேகத்தில் மோத செய்தனர்.

நேற்று அதை விட 3 மடங்கு வேகத்தில் 7 டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட் அள வில் புரோட்டான்களை மோத செய்தனர். பூமிக்கு அடியில் இவ்வளவு அதிக சக்தி கொண்ட பொருட்களை மோதவிட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சோதனை வெற்றி கரமாக அமைந்தது. விஞ்ஞானிகள் எதிர்பார்த்த படியே மோதல் நடந்து பெரும் வெடிப்பு நிகழ்ந்தது. அப்போது நிகழ்ந்த மாற்றங்களை 2 ஆயிரம் விஞ்ஞானிகள் கம்ப்யூட்டர் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

நேற்றைய சோதனை முழு வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இன்றும் பல்வேறு கட்ட சோதனைகள் நடக்க உள்ளன. அதன் பிறகே முழுமையான ஆய்வு முடிவுகள் தெரியவரும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com