மடுவுக்கு அருகே கிளேமோர் மீட்பு, மிதிவெடியில் 10வயது சிறுவன் கால் இழப்பு.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரின் தடுப்புக்காவலில் உள்ள புலிகளியக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மடு தேவாலயத்திற்கு அண்மித்த பகுதியில் 12 கிலோ கிராம் எடைகொண்ட கிளேமோர் குண்டொன்று நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் புளியங்குளம் பிரதேசத்தில் தனது தந்தையுடன் விறகு சேகரித்துக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் அங்கு புதைக்கப்பட்டிருந்த மிதிவெடியில் சிக்கி தனது வலது காலை இழக்க நேரிட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஐ.எம் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment