Thursday, January 14, 2010

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். 05

புன்னியாமீன் - B.A (cey), Dip in Journ (Ind), S.L.T.S தொடர்ச்சி….

பிரதான அபேட்சகர்களுள் ஒருவர் கொலை செய்யப்பட்ட 3ஆவது ஜனாதிபதித் தேர்தல்
3வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 1994 அக்டோபர் மாதம் 07ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படுமெனவும், 1994 நவம்பர் 09ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும் உத்தியோகபூர்வமான அறிவித்தல் ஜனாதிபதி திரு. விஜயதுங்க அவர்களின் பணிப்புரையின்படி தேர்தல் ஆணையாளர் திரு. ஆர். கே. சந்திரானந்த டி சில்வா அவர்களினால் 1994 செப்டெம்பர் 17ம் திகதி விடுக்கப்பட்டது.

இந்த அறிவித்தலின்படி ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிஸக் குடியரசின் 4வது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் பின்வரும் அபேட்சகர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

1. திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி)
2. திரு. நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி)
3. திரு. காமினி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி)
4. திரு.ஏ.கே. ரணசிங்க (சுயேட்சை)
5. திரு.ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி)
6. திரு. ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை)

தேர்தலின்போது இவர்களுக்கு வழங்கப்பட்ட சின்னங்கள் முறையே
1. நாற்காலி
2. மலர்ச்செடி
3. யானை
4. அன்னப்பறவை
5. விமானம்
6. மேசை

நியமனப்பத்திரம் ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்து தேர்தல் நடைபெறும் தினம் வரை முக்கிய நிகழ்வுகள்:

1. அபேட்சகர் கொலை

தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த திரு. காமினி திசாநாயக்க அவர்கள் 1994 அக்டோபர் 23ம் திகதி நள்ளிரவு 12.17 அளவில் கொழும்பு தொட்டலங்க (பாலத்தோட்டை) நாகலம் வீதியில் அமைந்துள்ள பொதுச் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு தமது இருக்கையை நோக்கிச் செல்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் கொலை செய்யப்பட்டார்.

இக்குண்டு வெடிப்பின்போது 3 குழந்தைகளுக்குத் தந்தையான 52வயதுமிக்க திரு. காமினிதிசாநாயக்கவுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் டாக்டர் காமினி விஜேசேகர, முன்னாள் அமைச்சர்களான திரு. வீரசிங்க மல்லிமாராட்சி, திரு. ஜி. எம். பிரேமச்சந்திர உட்பட சுமார் 62 மனித உயிர்கள் பலியாக்கப்பட்டன. (பலத்த காயங்களுக்கு உட்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற 2வது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டவரும், ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவரும், முன்னைய மேல்மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. ஒஸி அபேகுணவர்தனா அவர்கள் 1994 நவம்பர் 09ம் திகதி காலமானார்)

இத்துக்கரமான சம்பவத்தையடுத்து ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பான 1981ம் ஆண்டு 15ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலத்தின் 22ம் உறுப்புரையின் (1) (2) (3) உட்பிரிவுகளுக்கமைய 3 தினங்களுக்குள் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளர் 1994 ஒக்டோபர் 24ம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியைக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து 1994 ஒக்டோபர் 25ம் திகதி ஜனாதிபதி திரு. டீ.பீ. விஜயதுங்க தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான ‘சிரிகொத' வில் அவசரக்கூட்டமொன்று கூட்டப்பட்டது.

கட்சியின் 42 பிரதானிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதி அபேட்சகர்களாக திரு. காமினிதிசாநாயக்க அவர்களின் மனைவி திருமதி வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்களின் பெயரும், முன்னைய பிரதம மந்திரி திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டன.

2 பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டமையினால் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களையடுத்து ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒரு விசேட கமிட்டிக்கு விடப்பட்டது. இந்த விசேட கமிட்டியில் தலைவராக டீ.பீ. விஜேதுங்க மற்றும் உறுப்பினர்களாக திருவாளர்கள் விஜேபால மென்டிஸ், பெஸ்டஸ் பெரேரா, எம்.எச்.மொகம்மட், டிரோன் பெர்னாண்டோ, ஏ.ஸீ.எஸ். ஹமீத், சுசில் முனசிங்க, தஹம் விமலசேன, அனுரபண்டாரநாயக்க, ஹெரல்ட் ஹேரத், ஹென்றி ஜயமஹ, கே.என். சொக்ஸி ஆகிய 12 உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.

இவ்விசேட குழு திருமதி வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது எனத் தீர்மானித்தது. இத்தீர்மானத்தை கட்சியின் நிர்வாகக் குழு ஏகமனதாக அனுமதித்துள்ளதென கொழும்பு 7 ஸ்ரீமத் மாக்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுசில் முனசிங்க அவர்களினால் 1994.10.26ம் திகதி காலையில் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இம்முடிவினை கட்சியின் தற்காலிக செயலாளர் திரு. தஹம் விமலசேன அவர்களினால் அதே தினத்தில் தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

1981ம் ஆண்டு 15ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலத்தின் 22 (2) உறுப்புரையின்படி தேர்தல் ஆணையாளர் பெற்றுள்ள அதிகாரங்களுக்கமைய திருமதி வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்கள் ஐக்கியத் தேசியக் கட்சியின் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். இந்த உத்தியோகபூர்வமான அறிவித்தல் 1994 ஒக்டோபர் 27ம் திகதி தேர்தல் ஆணையாளரினால் விடுக்கப்பட்டது. அத்துடன், திட்டமிட்டபடி 1994 நவம்பர் 09ம் திகதி நாடுபூராவும் காலை 7.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை தேர்தல் நடத்தப்படுமெனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

2. அபேட்சகர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளல்

3வது ஜனாதிபதித் தேர்தலில் அபேட்சகர் திரு. நிஹால் கலப்பதி அவர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்டமை இத்தேர்தலின் மற்றுமொரு முக்கிய அம்சமாகும்.

நிறைவேற்று அதிகாரமிக்க அதாவது தனி அதிகாரமிக்க ஜனாதிபதிமுறை ஒழிக்கப்படுமெனவும், அதேநேரம், தனிப்பட்ட ஒரு நபருக்கு அதிகாரம் வழங்கப்படுவதைத் தடுத்து பாராளுமன்றத்தக்கும் பூரணபொறுப்புச் சொல்லக்கூடிய ஒரு நிர்வாக முறை ஏற்படுத்தப்படுமெனவும் பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளரும், பிரதம மந்திரியுமான திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் மக்களுக்கு உறுதியளித்து எழுத்து மூலமாக அறிவிப்பாராயின் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி வேட்பாளர் திரு. நிஹால் கலப்பதி அவர்கள் 1994.10.20ம் திகதியன்று பொதுசனத் தொடர்பு சாதனங்களினூடாக பகிரங்கமாக அறிவித்தல் விடுத்தார்.

இந்த சவாலை திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ஏற்றுக் கொண்டார். 1995ம் ஆண்டு ஜுலை 15ம் திகதிக்கு தற்போதைய அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படுமெனவும், மாற்றியமைக்கப்படும் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம், கொண்ட ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்படுமெனவும் 1994.10.21ம் திகதி இலங்கை ரூபவாஹினியில் இடம்பெற்ற விசேட பேட்டியில் குறிப்பிட்டார். 1994.10.19ம் திகதி பதுளை சேனநாயக்கா விளையாட்டரங்கில் பொதுக்கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதவி நீக்கப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விரிவாக முறையில் இவர் ஏற்கனவே விளக்கியிருந்தார். சந்திரிக்கா குமாரதுங்கவின் இந்நிலைப்பாட்டால் திருப்தியடைந்த கலப்பதி அவர்கள் 1994.10.27ம் திகதியன்று தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

3வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்

மேல்மாகாணம்

கொழும்பு மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 557,708 (64.82 %)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,819 (0.21%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 288,741 (33.56%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 3,533 (0,41%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 6,059 (0.70%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2) 2,526 (0.29%)

பதியப்பட்ட வாக்குகள் 1,235,959
செல்லுபடியான வாக்குகள் 860,386 (98.17 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 16,060 (1.83%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 876,446 (70.91%)

கம்பஹா மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 550,654 (64.74%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,832 (0.22%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 288,608 (33.93%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 2,711 (0.32%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 3,694 (0.43%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 3,019 (0.35%)

பதியப்பட்ட வாக்குகள் 1,140,808
செல்லுபடியான வாக்குகள் 850,518 (98.48%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 13,137 (1.52%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 863,655 (75.71%)

களுத்துறை மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 295,686 (61.47%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,388 (0.29%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 178,466 (37.10%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 1,398 (0.39%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,868 (0.39%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 2,213 (0.46%)

பதியப்பட்ட வாக்குகள் 646,199
செல்லுபடியான வாக்குகள் 481,019 (98.50%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,309 (1.50%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 488,328 (75.57%)


மத்திய மாகாணம்

கண்டி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 320,110 (56.64%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,370 (0.24%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 235,519 (41.68%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 1,752 (0.31%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 2,618 (0.46%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 3,748 (0.66%)

பதியப்பட்ட வாக்குகள் 726,192
செல்லுபடியான வாக்குகள் 565,117 (97.55%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 14,179 (2.45%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 579,296 (79.77%)

மாத்தளை மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 121,449 (60.98%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 680 (0.34%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 73,324 (36.82%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 608 (0.31%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 992 (0.50%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 2,111 (1.06%)

பதியப்பட்ட வாக்குகள் 250,816
செல்லுபடியான வாக்குகள் 199,164 (97.40%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,317 (2.60%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 204,481 (81.53%)

நுவரெலியா மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 168,929 (57.14%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,044 (0.35%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 116, 928 (39.55%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 1,083 (0.37%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,332 (0.45%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 6,314 (2.14%)

பதியப்பட்ட வாக்குகள் 386,668
செல்லுபடியான வாக்குகள் 295,630 (96.15%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 11,840 (3.85%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 307,470 (79.52%)

தென் மாகாணம்

காலி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 285,398 (61.40%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,487 (0.32%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 173,282 (37.28%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 1,179 (0.25%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,584 (0.34%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 1,885 (0.41%)

பதியப்பட்ட வாக்குகள் 632,412
செல்லுபடியான வாக்குகள் 464,815 (98.49%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,112 (1.51%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 471,927 (74.62%)

மாத்தறை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 227,865 (64.69%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,397 (0.40%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 118,224 (33.56%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 1,134 (0.32%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,564 (0.44%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 2,055 (0.58%)

பதியப்பட்ட வாக்குகள் 503,470
செல்லுபடியான வாக்குகள் 352,239 (98.40%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,731 (1.60%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 357,970 (71.10%)

ஹம்பாந்தோட்டை மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 132,873 (61.52%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,685 (0.78%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 77,735 (35.99%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 750 (0.35%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,538 (0.71%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 1,414 (0.65%)

பதியப்பட்ட வாக்குகள் 326,913
செல்லுபடியான வாக்குகள் 215,995 (98.18%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,013 (1.82%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 220,008 (67.30%)

வட மாகாணம்

யாழ்ப்பாண மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 16,934 (96.35%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 25 (0.14%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 223 (1.27%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 16 (0.09%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 36 (0.20%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 341 (1.94%)

பதியப்பட்ட வாக்குகள் 596,366
செல்லுபடியான வாக்குகள் 17,575 (99.20%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 141 (0.80%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 17,716 (2.97%)

வன்னி மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 33,585 (85.30%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 118 (0.30%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 4,493 (11.41%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 77 (0.20%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 96 (0.24%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 1,003 (2.55%)

பதியப்பட்ட வாக்குகள் 178,697
செல்லுபடியான வாக்குகள் 39,372 (98.30%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 681 (1.70%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 40,053 (22.41%)

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 144,275 (87.30%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 484 (0.29%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 14,812 (8.93%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 381 (0.23%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 349 (0.21%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 5,028 (3.03%)

பதியப்பட்ட வாக்குகள் 261,897
செல்லுபடியான வாக்குகள் 165,779 (98.42%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,664 (1.58%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 168,443 (64.32%)

திகாமடுல்லை மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 168,289 (72.36%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 574 (0.25%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 59,074 (25.40%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 496 (0.21%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 471 (0.20%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 3,677 (1.58%)

பதியப்பட்ட வாக்குகள் 312,006
செல்லுபடியான வாக்குகள் 232,581 (98.47%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,621 (1.53%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 235,202 (75.70%)

திருகோணமலை மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 77,943 (71.62%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 324 (0.30%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 28,006 (25.74%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 195 (0.18%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 279 (0.26%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 2,074 (1.91%)

பதியப்பட்ட வாக்குகள் 184,090
செல்லுபடியான வாக்குகள் 108,821 (98.44%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,726 (1.56%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 110,547 (60.05%)

வடமேல் மாகாணம்

குருநாகலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 403,838 (59.36%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,842 (0.27%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 266,740 (39.21%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 1,714 (0.25%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 2,211 (0.32%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 3,999 (0.59%)

பதியப்பட்ட வாக்குகள் 876,591
செல்லுபடியான வாக்குகள் 680,344 (98.48%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,511 (1.52%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 690,855 (78.81%)

புத்தளம் மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 165,795 (62.65%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 625 (0.24%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 95,211 (35.98%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 591 (0.22%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 617 (0.23%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 1,796 (0.68%)
பதியப்பட்ட வாக்குகள் 380,872
செல்லுபடியான வாக்குகள் 264,635 (98.26%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,689 (1.74%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 269,324 (70.71%)

வடமத்திய மாகாணம்

அநுராதபுர மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 200,146 (63.99%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,083 (0.35%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 107,342 (34.32%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 678 (0.22%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,014 (0.32%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 2,534 (0.81%)

பதியப்பட்ட வாக்குகள் 406,926
செல்லுபடியான வாக்குகள் 321,797 (98.05%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,205 (1.95%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 319,002 (78.39%)

பொலநறுவை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 88,907 (59.08%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 469 (0.31%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 59,287 (39.40%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 258 (0.17%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 428 (0.28%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 1,126 (0.75%)

பதியப்பட்ட வாக்குகள் 200,192
செல்லுபடியான வாக்குகள் 150,475 (97.43%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,966 (2.57%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 154,441 (77.15%)

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 182,810 (55.27%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,372 (0.41%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 139,611 (42.21%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 1,387 (0.42%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,745 (0.53%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 3,847 (1.16%)

பதியப்பட்ட வாக்குகள் 435,260
செல்லுபடியான வாக்குகள் 330,772 (95.91%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 14,093 (4.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 344,865 (79.23%)

மொனராகலை மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 96,620 (63.20%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 824 (0.54%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 52,026 (34.03%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 556 (0.36%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 877 (0.57%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 1,966 (1.27%)

பதியப்பட்ட வாக்குகள் 199,391
செல்லுபடியான வாக்குகள் 152,867 (97.46%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,977 (2.54%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 156,846 (78.66%)

சப்பிரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 257,265 (58.07%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,279 (0.29%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 177,924 (40.16%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 1,235 (0.28%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,877 (0.42%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 3,451 (0.78%)

பதியப்பட்ட வாக்குகள் 554,607
செல்லுபடியான வாக்குகள் 443,031 (98.31%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,595 (1.69%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 450,626 (81.25%)

கேகாலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 211,676 (56.06%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,028 (0.27%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 159,707 (42.30%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 1,020 (0.27%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,402 (0.37%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 2,759 (0.73%)

பதியப்பட்ட வாக்குகள் 500,947
செல்லுபடியான வாக்குகள் 377,592 (98.14%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,139 (1.86%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 384,731 (76.80%)

மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் 1994
இறுதித் தேர்தல் முடிவுகள்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A) 4,709,205 (62.28%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 2,715,283 (35.91%)
ஹட்சன் சமரசிங்க (Ind – 2)) 58,886 (0.78%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 32,651 (0.43%)
ஏ.ஜே. ரணசிங்க (Ind – 1) 22.752 (0.30%)
நிஹால் கலப்பதி (S.L.P. F) 22,749 (0.30%)

பதியப்பட்ட வாக்குகள் 10,937,279
செல்லுபடியான வாக்குகள் 7,561,526 (98.03%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 151,706 (1.97%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 7,713,232 (70.52%)

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)

3,780,763

குறைந்த பட்ச வாக்குகளை விட சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

928,442

இரண்டாம் இடத்தைப் பெற்ற வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்களை விட சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

1,993,922

தொடரும்…

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com