Monday, December 7, 2009

SB அரசுடன் இணைவு : ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிற்கு ஆதரவு.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபையின் எதிர்கட்சி தலைவருமான SB திசாநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதுடன், கட்சியில் தான் வகிக்கும் சகல பொறுப்புக்களையும் ராஜனாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய அவர் கட்சியில் இருந்து விலகியமைக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் எனவும் , அசௌகரியங்களுக்கு கட்சியின் ஆதரவாளர்கள் தன்னை மன்னித்துக்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுள்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment