ராஜபக்ச ஐ.தே.கட்சியுடனும் ஜோன்ஸ்ரன் அரசுடனும் இணைந்து கொண்டனர்.
அரசில் அங்கம் வகித்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாஸ ராஜபக்ச இன்று ஐக்கிய தேசிக் கட்சியுடனும் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்ரன் பெர்ணாண்டோ அரசுடனும் இணைந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
விஜேயதாஸ ராஜபக்க அவர்கள் சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கான சட்ட ஆலோசகர்களில் ஒருவராக செயற்பட்டவர் என்பதுடன் கடந்த காலங்களில் ஊழலுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் எழுப்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாககும்.
அதே நேரம் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஏற்றுக்கொள்வதில் கட்சியுடன் முரண்பட்டு கட்சியில் இருந்து வெளியேறியுள்ள ஜோன்ஸ்ரன் பெர்ணன்டோவிற்கு அமைச்சுப்பதவி ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment