புலிகளுள் ஏற்பட்ட பிளவுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. - அலி சாகீர் மௌலானா
2004 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமெரிக்காவில் இருந்து நேற்றைய தினம் நாடு திரும்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகீர் மௌலானா கூறியுள்ளதாகத் தெரியவருகிறது.
தனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2006 ஆம் ஆண்டு எனக்கு அச்சுறுத்தல்களும் பயமுறுத்தல்களும் ஏற்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சி என்னை தனிமைப்படுத்தி விட்டது. 2007 ஆம் ஆண்டு ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா வந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னைச் சந்தித்து நாடு திரும்பி மீண்டும் அரசியலில் ஈடுபடுமாறும், பாதுகாப்பான நிலை இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் இலங்கை தூதராலயத்தில் உயர் பதவியொன்றையும் வழங்கியிருந்தார்" என்றார். நேற்று நாடு திரும்பியதும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment