காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி : குழவிகளின் குவலயம்
முன்பள்ளிப் பாடசாலைகளின் வருடாந்த கலைக்கோலம் அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனம் இன்று திங்கட்கிழமை கல்முனை வலயத்திற்கான பயிலரங்கை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் நடாத்தியபோது, கல்முனை வலய மேலதிக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுலோஜனா ஆனந்தராஜா உரையாற்றி ஆரம்பித்து வைப்பதையும், சமய சிறப்பு விரிவுரைகளை கலாபூசணம் இரா.கிருஸ்ணபிள்ளை இசட்.எம். நதீர் மௌலவி போதகர் எஸ்.கிறிஸ்தோபர் வண.சங்கரத்ன தேரர் ஆகியோர் விரிவுரையாற்றுவதையும், சம்மேளன பணிப்பாளர் டாக்டர் எ.எல்..பாறுக் உரையாற்றுவதையும், அங்கு கேட்ட வினாவுக்கு விடையளித்த மாணவிக்கு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி அதிபர் அருட்.சகோ.ஸ்ரீபன் மத்தியூ பரிசளிப்பதையும் குழுவினரையும் படங்களில் காணலாம் .
காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளிப் பாடசாலையின் வருடாந்த குழவிகளின் குவலயம் விடுகை விழா சனியன்று காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் நடைபெற்றபோது சிறுவர்கள் கலைநிகழ்ச்சிகளில் ஈடுபடுவதையும் பிரதம அதிதியான கிழக்கு மாகாண சபை உறுப்பிளர் பி.செல்வராஜா தவிசாளர் ந.ஜீவராசா இணைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிதிகள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதையும் படங்களில் காணலாம்.
href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFwD0I7X2Tn_KgXeSbD1KAipCKHPbXJzSVGmBc_UclDjISULfASJJOmqCmiBRh3yH2gIAEVJ1NHKJnY90TIYBDyeprCnQwslIh4KV01H9jCllQzksRGUWd1_ogERKPRMOMCj9pMDvW8m5n/s1600-h/montee4.JPG">
காரைதீவு மனித அபிவிருத்தித்தாபன முன்பள்ளிப் பாடசாலைகளின் வருடாந்த கலைக்கோலம் விடுகை விழா ஞாயிறன்று காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் நடைபெற்றபோது சிறுவர்கள் கலைநிகழ்ச்சிகளில் ஈடுபடுவதையும் பிரதம அதிதியான காரைதீவு உதவி பிரதேச நெயலாளர் சிவ.ஜெகராஜன் உள்ளிட்ட அதிதிகள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதையும் படங்களில் காணலாம்.
(செய்தி மற்றும் படங்கள் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்)
No comments:
Post a Comment