ரஷிய விண்கலம் சோயுஸ் விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்தது. இந்த தகவலை ரஷிய கட்டுப்பாட்டு அறை அதிகாரி வளரி லிண்டின் தெரிவித்தார். விண்கலத்தில் சென்ற அமெரிக்காவின் டிமோதி ஜே கிரீமர், ஜப்பானின் சோய்ச்சி நோகுச்சி, ரஷியாவின் ஒலெக் கோடோவ் ஆகியோரை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த ஜெப் வில்லியம்ஸ், மேக்சிம் சுரவேவ் ஆகியோர் வரவேற்றனர். விண்கலத்தில் சென்ற 3 வீரர்களும் அடுத்த ஆண்டு மே மாதம் வரை சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி இருப்பார்கள்.
No comments:
Post a Comment