Thursday, December 17, 2009

ஜெனரல் சரத் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டது.

ஜெனரல் பொன்சேகாவிற்கு போதிய பாதுகாப்பு வழங்காமையானது அவரது அடிப்படை உரிமை மீறல் எனத் தெரிவித்து, நீதிமன்றை நாடிய சரத் பொன்சேகா தனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க நீதிமன்று உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தார்.

சரத்பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. பிரதம நீதியரசர் அசோக டீ சில்வா தலைமையில் உச்ச நீதிமன்ற நிதிபதிகளான அமரசிங்க மற்றும் பிஏ ரத்நாயக்க ஆகியோர் மனு மீதான விசாரணையை நடாத்தினர். தற்போது தேர்தல் ஒன்று இடம்பெறுகின்ற தருணத்தில் நாட்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் சட்டமானது தேர்தல் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துடன், மனுதாரர் தற்போது வேட்பாளராகையால் அவருக்கான பாதுகாப்புக்கு சிபார்சு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கே உண்டு எனவும், மனுதாரருக்கு உள்ள அச்சுறுத்தல் எவ்வளவு என்பதை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையுடன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்து மனுவை நிராகரித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com