புலிகளின் கப்பல் ஒன்று இலங்கை துறைமுகத்திற்கு கொண்டுவரப்படுகின்றது.
பிறின்சஸ் கிறிஸ்ரினா எனப் பெயரிடப்பட்டதும் புலிகளியக்கத்திற்கு சொந்தமானதும் எனக் கருதப்படும் மிகப்பெரும் கப்பல் ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்படுவதாக கடற்படைப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். பனாமா நாட்டிற்கான கொடியுடன் பயணத்துக்கொண்டிருந்த சுமார் 90 மீற்றர் நீளமான இக்கப்பல் புலிகளின் ஆயுதக்கடத்தல் மன்னன் என அறியப்படுபவரும் , இலங்கை படையினரின் தடுப்புக்காவலில் உள்ளவருமான கே.பி வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே கைப்பற்ற முடிந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
புலிகளுக்கான ஆயுதக்கடத்தலில் பல காலங்களாக ஈடுபட்டவந்துள்ள இக்கப்பலில் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் ஏனைய தலைவர்களை நாட்டிற்கு வெளியே கொண்டுசெல்வற்கான முயற்சிகள் இறுதி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதான சந்தேகங்களும் நிலவுவதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment