படையினர் மீதான குற்றச்சாட்டுக்கள் அவர்களின் ஐ.நா பணிகளை பாதிக்கும்: கரன்ணகொட
சிறீலங்கா படையினர் மேற்கொண்டதாக கூறப்படுகின்ற போர்குற்றங்கள் தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபையில் படையினர் மேற்கொண்டு வரும் பணிகளை பாதிக்கும் என முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்ணகொட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் சிறீலங்கா அரசின் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:
வெள்ளைக்கொடியுடன் சரணடைய சென்ற விடுதலைப்புலிகளின் தலைவர்களை 58 ஆவது படையணியினர் சுட்டுகொன்றதாக அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளது சிறீலங்கா இராணுவத்தினர் கெய்ட்டியில் மேற்கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் சபைக்கான பணிகளை பாதிக்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளுக்கு சிறீலங்கா படையினர் தெரிவுசெய்யப்படுவதையும் இது பாதிக்கும். இது அவர்களின் வெளிநாட்டு பயிற்சிகளையும் பாதிக்கும்.
பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, அது அனைத்துலகத்தின் தலையீட்டிற்கு வழிவகுக்கும். போரியல் குற்றங்கள் அதன் மீதான விசாரணகைள் என்ற போர்வையில் அனைத்துலகம் சிறீலங்காவில் கால்பதிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஜெனரல் பொன்சேகாவும், அட்மிரல் கரன்ணகொடவும் ஒன்றாக பணியாற்றிய போது இருவருக்கும் இடையில் பல தடவைகள் மோதல்கள் ஏற்பட்டிருந்தன. அதன் வெளிப்பாடகவே கரன்ணகொடவின் தற்போதைய கருத்து அமைந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
0 comments :
Post a Comment