Wednesday, December 23, 2009

சரத் பொன்சேகாவின் பெயரில்லாத வரலாற்றுப் புத்தகத்தை எரிப்போம். -சோமவன்ச-

இலங்கையின் வரலாறு தொடர்பாக புத்தகம் ஒன்று வரையப்படுவதாகவும் அப்புத்தகத்தில் சரத் பொன்சேகாவிற்கு உரிய இடம் வழங்கப்படாது போனால் அவ்வரலாற்றுப் புத்தகத்தினை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்த ஜேவிபி யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தாம் சரத் பொன்சேகாவிற்கு உரிய இடத்துடன் புதிய புத்தகம் ஒன்றை வரைவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இலங்கையின் புதிய வரலாற்றுப் புத்தகம் ஒன்றினை வரைவதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அப்புத்தகத்தினை வரைகின்ற விடயம் பாரமளிக்கப்பட்டுள்ள புத்திஜீவிகளிடம் சரித்திரப்புத்தகத்தில் சரத் பொன்சேகாவின் பெயரை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்ததுடன் அவ்வாறு சரத் பொன்சேகாவின் பெயர் இல்லாத புத்தகம் ஒன்று வெளியாகுமாயின் அப்புத்தகத்தை எரித்துவிட்டு தாம் சரியான வரலாற்றினை எழுதவுள்ளதாகவும் அதைச் செய்ய தம்மால் முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com