புலிகள் இயக்கத்தின் பெயரில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களைப் பொறுப்பேற்று அவற்றை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
புலிகளின் சொத்துகள் தொடர்பில் தற்போது புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும், விசாரணைகள் நிறைவடைந்ததும், தகவல்கள் பாராளுமன்றத்தில் வெளியிடப்படுமென்றும் பிரதமர் கூறினார்.
2009 மே மாதம் 18 ஆம் திகதி புலிகள் இயக்கம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அந்த இயக்கத்தின் தங்கம் உள்ளிட்ட பெருமளவு சொத்துகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவை தொடர்பான தற்போதைய நிலவரம் யாதென்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, மே மாதம் 18 ஆம் திகதி புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் பாதுகாப்புப் படையினர் சொத்துக்களை மீட்டுள்ளனர். தங்கம் உள்ளிட்ட சொத்துகள் குறித்து புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள கே. பீ. மூலம் புலிகள் இயக்கத்தின வெளிநாட்டுச் சொத்துகள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
அவர்களுக்குச் சொந்தமான பல கப்பல்களில் சிலவற்றைக் கடற்படையினர் அழித்துள்ளனர். எஞ்சிவை தொடர்பாக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. இது தொடர்பான தகவல்கள் பின்னர் வெளியிப்படும்” என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment