தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் போது இடம் பெற்ற சகல சம்பவங்களுக்கும் இராணுவப் படைத் தளபதி என்ற ரீதியில் தாம் பொறுப்பேற்கிறார் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநா டொன்றில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் கூறினார். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் உயர் இராணுவ அதிகாரிகள் முதல் கடை நிலை சிப்பாய்கள் வரையில் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளுக்குமான பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொள்கிறார் என அவர் தெரிவித்தார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யுத்த மரபுகள் மீறப்படவில்லை எனவும், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே யுத் தம் முன்னெடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வி திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் மே மாதம் 17, 18 மற் றும் 19 ஆம் திகதிகளில் விடுதலைப் புலி களின் சிரேஷ்ட தலைவர்கள் எவரும் சரண யடைக் கோரவில்லை. யுத்தம் தொடர் பான சகல பொறுப்புகளையும் நானே ஏற் றுக்கொள்கிறேன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment