Saturday, December 12, 2009

ஜெனரல் சரத் பொன்சேகா இந்திய சஞ்சிகை ஒன்று வழங்கிய நேர்காணல்


இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி இந்திய சஞ்சிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல்.

பேட்டி கண்டவர் சற்றாப்பு பட்டாச்சாரியா

கேள்வி:- ஏன் நீங்கள் அண்மைய போர் வெற்றியை அடுத்து உங்களது உயர் பாதுகாப்பு அதிகாரி பதவியை இராஜனாமாச் செய்து தேர்தற் களத்தில் குதித்தீர்கள்.?


நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நவம்பர் 12, 2009 கொடுத்த இராஜனாமாக் கடிதத்தில் எனது காரணங்களை எடுத்தியம்பியுள்ளேன். அது ஒரு பெரிய கதை. உயர் பாதுகாப்பு அதிகாரி என்ற பதவி மிகவும் வசதியானது. ஆனால் அதற்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இப்படியான ஓர் உயர் அந்தஸ்தில் ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருந்ததில் , எமது நாட்டில் எந்த மட்டத்திற்கு ஊழல் உச்சியில் உள்ளது என்றும் நாட்டு மக்களுக்கு எந்தவித நீதி நியாயமோ வழங்கப் படுவதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டேன். இந்த அனுபவத்திலிருந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை எமது நாட்டுக்குப் பெரிய தீங்கை விளைவிக்கிறது என்று புரிந்து கொண்டேன். ஜனநாயக அரசியல் அமைப்புமுறைக்குப் பெரிய தீங்கை விளைவிக்கிறது. நாட்டுக்குப் பெரிய அதிகாரமுள்ள தலைவன் இருப்பது நல்லது. ஆனால் அது அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்யாமல் இருக்கும் மட்டும்தான் நல்லது. இலங்கையில் உள்ள பிர்தியேக ஜனாதிபதி முறை எவர் ஜனாதிபதியாக வந்தாலும் பரவாயில்லை, நாட்டுத்தலைவன் அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்வதற்கு அதிக வழிகளைத் திறந்து வைத்துள்ளது. எங்கள் நாட்டில் பல வருடங்களாக எந்தவிதமான உட்கட்டு;மான அபிவிருத்திப் பணிகள் செய்வதையும் நான் காணவில்லை. சில வீதிகளும் பாலங்களும் கட்டப்படுவது முந்திய அரசாங்கங்களால் திட்டமிடப்பட்டவையே. அபிவிருத்திகளைச் செய்யாமல் விட்டதற்கு யுத்தம் ஒரு காரணம் அல்ல.

கேள்வி:-யுத்தத்திற்கு எவ்வளவு செலவளிக்கப் பட்டது?
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 வீதத்திற்கு மேல் ஓருகாலமும் போகவில்லை.

கேள்வி:- கடந்த 3 வருடங்களாக எவ்வளவு செலவிடப் பட்டது?
கடந்த வருட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டில் இலங்கை ரூபா 70 பில்லியன் (62 மில்லியன் அமெரிக்க டொலர்கள்). இந்த 70 பில்லியன் ரூபாவிலேயே குண்டுகளும் மற்றய பாதுகாப்புக்கான தளபாடங்களும் வாங்கப் பட்டன). யுத்தத்தைத் தொடங்குவதற்கு முன்னர்( யுத்தத்தின் கடைசிக் கட்டமான 2008 ஆகஸ்ட்டிலிருந்து 2009 மே வரையும்) 32 பில்லியன் இலங்கை ரூபாவே செலவிடப் பட்டது. இது யுத்தத்தின் போது இரண்டுமடங்காக்கப் பட்டது. யுத்தத்தின் கடைசிக் காலத்தில் குண்டுகளை மாத்திரமே வாங்கினோம். நான் ஏதும் புதிய ஆயுத வகைகளை வாங்கவில்லை. முழு ஆயுத வகைகளும் அதாவது நாங்கள் வைத்திருக்கும் பெரிய எறிகணை வகையறாக்கள் முந்திய ஜனாதிபதிகாலத்தில் விலைக்கு வாங்கப் பட்டவை. 2007 முடியுமட்டும் கையிருப்பில் இருந்த பழைய குண்டுகளையே பாவித்தோம். நாம் வாங்க ஒப்பந்தம் செய்த புதிய குண்டு வகைகள் 2008 லேயே வந்;து சேர்ந்தன. 2008 லே ஆயுதவகைகள் வாங்க ஏற்பாடு செய்தவை கடன்முறையிலேயே ஒப்பந்தம் செய்துகொள்ளப் பட்டன. இந்தக் கடன் கொடுப்பனவுகள் உண்மையிலேயே 2020 லேயே இறுக்கப்படும். அதிகமான கடனுக்கு ஆயுத வாங்குககைள் சீனாவிலிருந்தே பெறப்பட்டன. அவர்கள் மாத்திரம்தான் கடனுக்கு விற்பனை செய்வார்கள். பீஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டு நடைபெற்ற காலங்களில் 4 மாதங்;களாக அவர்களது கப்பல்கள் வரவில்லை. அந்தக் காலத்தில் பாகிஸ்தான் இராணுவத் தளபதியை அணுகி அவசரத் தேவைக்காக அவர்களிடம் இருந்த குண்டுகளை வாங்கினோம்.

கேள்வி:-நீங்கள் வேறு நாடுகள் ஏதிலும் இருந்து குண்டுகளை வாங்கினீர்களா?
ஆகாயப் படை மிக்கை உக்கிரேனிலிருந்தும் குண்டுகளை இஸ்ரேலிலிருந்தும் வாங்கினோம்.

கேள்வி:- நீங்கள் புதுடெல்கியிலிருந்து என்னவிதமான உதவிகளைப் பெற்றீர்கள்?.
அரசியல் மற்றும் நீதி சம்பந்தான உதவிகளையே பெற்றோம்.

கேள்வி:- இந்திய செயற்கைக் கோள் செய்திகளையும் உளவுச் செய்திகளையும் உங்களுக்கு வளங்கியதா?
நிஜமாக இல்லை. அப்படிச் செய்திருந்தாலும் நான் அதை உங்களுக்குச் சொல்ல மாட்டேன். (சிரிப்பு). நாங்கள் அப்படியான உதவிகளை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இந்தியா எப்பொழுதுமே பயங்கரவாதத்திற்கு இங்கே எதிரானது. தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் பெரிய அழுத்தங்களை மத்திய அரசுக்குப் போட்ட போதும், மே9, இல் பொதுத் தேர்தல் நடைபெற்ற போதும் இந்தியா எங்கள் செயற்பாடுகளிலே தலையிடவில்லை.

கேள்வி:- இந்தியாவிடமிருந்து அரசியல் உதவிகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஸ என்ன பத்திரத்தை வகுத்தார்?

கொழும்பும் புதுடெல்கியும் ஒரு பரஸ்பர உடன் பாட்டில் இருந்தார்கள். நாங்கள் தமிழ் குடிமக்களை தாக்கக்கூடாது என்ற உடன் பாட்டில் இருந்தார்கள். இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் எங்களது இராணுவ நடவடிக்கைகளால் இந்தியாவுக்கு ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை. நாங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு துன்பமும் செய்ய மாட்டோம் என்று இந்தியாவுக்குச் சொல்லியிருந்தோம். புலிப் பயங்காரவாத அமைப்பை நிர்மூலமாக்குவதே எமது ஒரே நோக்கம் என்று சொல்லியிருந்தோம்.

கேள்வி:-ராஜீவ் காந்தியின் கொலை இலங்கை இந்திய உறவை மாற்றியிருந்ததா?

1991 க்கு முன் இலங்கையில் தமிழ் மக்களுக்குப் பாரபட்சம் நடக்கின்றது என்று நம்பியிருந்தது. 1991 இற்குப் பிறகு இந்தியா இங்கே ஒரு பயங்கரவாத இயக்கம் இருப்பதென்பதை உணர்ந்து கொண்டது.

கேள்வி:-நீங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டால் உங்களது வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்கும்?
அணிசேராக் கொள்கை தொடரும். கடந்த காலங்களில் மேற்குலகங்களுடனான எமது கொள்கை சிறிது சுமூகமற்றிருந்தது. அவர்கள் யுத்தக் குற்றம் பற்றிப் பேசியிருந்தார்கள். அந்தச் சந்தேகங்கள் தீர்கப்படும் என்று உறுதி கூறுகிறேன். நாம் எமது பேரைச் சுத்தப்படுத்த வேண்டும். எப்படி அதைச் செய்வதென்றால் அது பற்றி அவர்களோடு கலந்துரையாட வேண்டும். நாங்கள் சரியான வழிகளில் நடக்க வேண்டும். சர்வதேச சம்பிரதாயங்களும் நடைமுறைகளும் நியமங்களும் உள்ளன. அதன்படிக்கே நாம் நடக்க வேண்டும். அது செய்யப்பட வேண்டும்.

இந்தப் பிரதேசத்திலே இந்தியாவின் பாதுகாப்பு உணர்வுகளுக்கு உத்தரவாதமளிக்க வேண்டும். அதைக் குறைத்து மதிபிடக் கூடாது. அதை நண்பனாகப் பார்க்க வேண்டும். இலங்கை இந்தியாவின் தேசியபாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்காது என்பதை இந்தியா உணர வேண்டும். கட்டாயம் எமது இராணுவ உறவுகள் நன்றாகவே உள்ளது. நாங்கள் சார்க் நாடுகளோடு நல்லுறவை வளர்க்க வேண்டும்.

கேள்வி:- நீங்கள் சீனாவா இந்தியாவா என்று வரும்பொழுது எப்படிப் பார்க்கிறீர்கள்?
எங்களுக்குச் சீனாவோடும் பாகிஸ்தானோடும் நீண்டகால உறவு உண்டு. சீனாவோடு எங்களது உறவானது கேந்திர முக்கியத்துவ நோக்கில் அன்று. அபிவிருத்திகளுக்கான உதவி பெறுவது போன்றதுதான்.

கேள்வி.-நீங்கள் சொன்னீர்கள் ஜனாதிபதி ராஜபக்ஸ, இலங்கையிலே ஓர் இராணுவச் சதி நடைபெறவுள்ளாதாக இந்தியாவைத் தொடர்பு கொண்டதால் இலங்கை இராணுவத்தின் மதிப்பு மங்கி விட்டதென்று. என்ன நடந்தது?

நான் வியப்படைகிறேன்! ஒக்டோபர் 15 இல் ஆரோ குடிபோதையில் இருந்தவர் இப்படி உலகம் முழுவதும் தொலைபேசி எடுத்துள்ளார். நான் ஒரு நாட்டின் தலைவனாக இருந்தால் இராணுவத்தை எப்படி எனது கட்டுப்பாட்டில் வைத்திருப்து என்று கவலை கொண்டே இருக்க மாட்டேன். ஒரு அரசு தனது இராணுவத்தை நம்பவில்லையென்றால் அந்த அரசு தனது கடமையைச் செய்யவில்லை என்பதே அதன் அர்த்தம்.

கேள்வி:- நீங்கள் எப்படி ராஜபக்ஸவோடு முரண்பட்டுக் கொண்டீர்கள்?

யுத்தத்தை வெற்றி கொண்டு 5 நாட்களுக்குப் பிறகு, ஜனாதிபதியின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், அவர் சொன்னார் தான் இராணுவத்திற்குப் புதிதாகச் சேர்ப்பதை நிறுத்தி விட்டேனென்று. ஏனெனில் எமது இராணுவம் மிக மிகப்பலமானதோடு மிகப் பெரியதுமாகும். அதனால் சிறிலங்கா மாயன்மார் போல வரக் கூடும். அப்படியான கூற்று என்னை மனக்கிலேசப் படுத்தியது. நான் நினைத்தேன் அவர்கள் என்னை வெறுக்கிறார்கள் என்று.

கேள்வி:-13 வது திருத்தச் சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வடகீழ் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கு ஆதரவு வழங்குவீர்களா?
நான் ஒரு தீர்வுபற்றி உடனடியாகக் கூற முடியாது. எதிர் அரசியல் செய்யும் கட்சிகளோடு கூடி ஆலோசனை செய்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். நான் 13 வது திருத்தத்திற்கு அப்பால் அதாவது 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு அப்பால் போக வேண்டும். எல்லாச் சமூகங்களும் ஏற்றுக் கொள்ளும் தீர்வே நல்ல தீர்வாக அமையும்.

கேள்வி:- மே யிலே யுத்தம் முடிவடைந்த பிறகு கைது செய்யப் பட்டிருக்கும் ஆயிரக் கணக்கான கைதிகளுக்கு என்ன நடக்கிறது?
அவர்களிலே பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு இலங்கை நாட்டுச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்பட வேண்டும். மற்றயவர்களை விசாரணை செய்து விடுதலை செய்ய வெண்டும். கடைசி நேரத்தில் சரணாகதி அடைந்த 10000 புலிகளியக்க உறுப்பினர்களுக்கும் புனருத்தாபனம் வழங்கப்படவேண்டும்.

கேள்வி:- நீங்கள் எப்பவாவது இந்தியாவில் பயிற்றப்பட்டீர்களா?
நான் முதன்முதலாக கொமாண்டா பயிற்சிக்கு இந்தியாவிலுள்ள பெல்கவுமுக்குப் போனேன். 1976 இல் காட்டு யுத்தப் பயிற்சிக்கு மொசோறாவுக்குப் போனேன். 1979 இல் பட்டாள ஒத்துழைப்புப் பயிற்சிக்கு மத்திய பிரதேசத்திலுள்ள மோவோவுக்குப் பேனேன். கடைசியாக 1991 இல் அதிமேற்பிரிவு கட்டளை அதிகாரிப் பயிற்சிக்கு மீண்டும் மோவோவுக்குப் போனேன். எனக்கு இந்தியாவில் அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். ஓய்வுபெற்ற ஜெனரல் சதீஸ் நம்பியார் எனது நண்பர்.

கேள்வி:-நீங்கள் பொலிவூட் சினிமா பார்ப்பீர்களா?
இரானுவத்தில் எனது தொடக்க காலமான 70இல் நானும் நண்பர்களும் அமிதா பாச்சானின் படங்களைப் விரும்பிப் பார்ப்பது வழக்கம். எனக்கு சமி கபூர், சசி கபூர், ராஜேஸ் கானா, சர்மலா தாகூர் போன்றோரை விரும்புகிறேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com