சுவிஸில் நடந்த ஒரு சர்வசன வாக்கெடுப்பில் முஸ்லீம்கள் அவர்களின் பள்ளிவாயல்களுடன் சேர்த்து அமைக்கும் கோபுரங்களான "மினராக்களை" தடை செய்யப்பட்டுள்ளது. சுவிஸர்லாந்தில் நடத்தப்பட்ட சர்வசன வாக்கெடுப்பில் 57.5 வீதமான பெரும்பான்மை கிரிஸ்தவர்கள் இத்தகைய மினராக்கல் அமைக்கப்படுவதை எதிர்த்து வாக்களித்துள்ளனர். மினராக்கள் என்பது முஸ்லீம்களின் பள்ளவாயல்களை அடையாளப்படுத்தும் சின்னமாகும். இந்த மினராக்கள் ஊடாகவே முஸ்லீம்கள் ஐவேளை தொழுகைக்காக அழைக்கப்படுகின்றனர்.
இது போலவே பிரான்ஸில் முஸ்லீம் பெண் மாணவிகள் பாடசாலைகளில் பர்தா அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசானது முஸ்லீம் மாணவர்களை மட்டுமல்லாது கிறிஸ்தவ மாணவர்கள் சிலுவை அணிவதையும் யூத மாணவர்கள் தங்கள் மத சின்னங்கள் அணிவதையும் தடை செய்துள்ளது.
ஆனால் சுவிஸர்லாந்தில் தடைசெய்யப்படவுள்ள மினராக்கல் அமைக்கும் விடயம் தனியே சிறுபான்மையாக உள்ள முஸ்லீம்களை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதால் அதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் அமெரிக்க ஜனாதிபதியும் இந்த விடயத்தை கண்டித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில் பள்ளிவாயல் என்பது ஒரு அரசின் பாடசாலை போன்ற அமைப்பு அல்ல அது மக்கள் கடவுளை வணங்க பயன்படுத்தும் இடம் இத்தகைய இடத்தில் அவர்களின் சின்னங்களை தடைசெய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் அப்படி தடை செய்வதாயின் கிறிஸ்தவர்களின் சிலுவையையும் ஏனைய மதங்களின் சின்னங்களையும் அந்த மதத்தளங்களில் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என்று சர்வதேசமும் தெரிவித்துள்ளது.
இது குறித்து சுவிஸ் அரசு தெரிவிக்கையில் நாங்கள் மக்களின் தீர்பை மதித்து நடப்போம். சவூதி அரேபியாவில் ஏன் கிறிஸ்தவர்கள் சுதந்திரமான வணக்கத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை? காரணம் அவர்கள் அவர்களின் மார்கத்தை சுத்தமாக பேண நினைக்கின்றனர் அதே போன்றே நாங்களும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சவூதியில் வெளிப்படையாக ஏனைய மத நடவடிக்கைகள் செய்வதற்கு தடையிருந்தாலும் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், பக்ரேன் உட்பட முற்று முழுதாக கிறிஸ்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.
எது எவ்வாறாயினும் இச்செயலானது முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஒரு மனப்போக்கு வளர்வதற்க்கு வழிவகுக்கும் என சர்வதேச அமைப்புக்கள் கண்டம் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment