குற்றச்சாட்டுக்களை ஏற்க மறுக்கின்றார் ராஜரட்ணம்
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கோடீஸ்வரரான ராஜ் ராஜரட்ணம் 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் நிதி மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவரின் வழக்கு நியூயோர்க் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஆஜராகிய ராஜரட்ணம் தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என மறுத்துள்ளார். அமெரிக்காவில் நடந்த மோசடி வழக்குகளில் இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள மோசடி தொகையே மிக அதிகமானது எனப்படுகிறது. ராஜரட்ணத்துடன் இந்தியாவிலிருந்து வந்து அமெரிக்காவில் வாழும் நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
ராஜரட்ணத்துக்காக வாதாடிய வக்கீல் ஜோன் டவுட் இன்றைய வாதத்தின்போது "ராஜரட்ணம் அப்பாவி, அவரின் மீதான குற்றங்களை நீதிமன்றக்குழுவினர் அனைத்து சான்றுகளையும் சோதனைசெய்து, ஆராய்ந்து அவரைக் குற்றவாளி அல்ல எனக் கூறும் நாளை அவர் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்" என்றார். விடுதலைப் புலிகளுடன் தொடர்பான தொண்டு நிறுவனத்துக்கும் ராஜரட்ணம் நிதியுதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 20 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் எனக் கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment