Sunday, December 20, 2009

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ம.ம.மு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு: சந்திரசேகரன்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. இந்தத்தீர்மானம் குறித்து ஆராய்வதற்கான மலையக மக்கள் முன்னணியின் செயற்குழுக்கூட்டமும் பேராளர் மாநாடும் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி ஹட்டனில் இடம்பெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அநீதியொழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரன் தலைமையில் இடம் பெற்ற இந்தக்கூட்டங்களில் முனனணியின் பொதுச்செயலாளர் எஸ்.விஜயகுமாரன் ,பிரதித்லைவரும் பிரதியமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் ,ஊவாமாகாண சபை உறுப்பினர் அரவிந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கான காரணங்களை அமைச்சர் பெ.சந்திரசேகரன் முன்னணியின் செயற்குழு உறுப்பினர்களுக்கும் பேராளர்களுக்கும் தெளிவுபடுத்தினார்.

இதேவேளை இந்தத் தீர்மானம் குறித்த பகிரங்க அறிவித்தலை இன்று 20 ஆம் திகதி மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பெ.சந்திரசேகரன் ஹட்டனில் வைத்து அறிவிக்கவுள்ளார்.

No comments:

Post a Comment