Thursday, December 10, 2009

புதிய நியமனங்கள், இடமாற்றங்கள், பதவி உயர்வுகளுக்கு தடை. தேர்தல் ஆணையாளர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை அரச திணைக்களங்களில் புதிய நியமனங்கள், இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் எதுவும் இடம்பெறக்கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்களுக்கு அரசியல் யாப்பில் இடமில்லை என தெரிவித்துள்ள அவர் பல இடமாற்றங்கள், புதிய நியமனங்கள், பதவிஉயர்வுகள் என்பன இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை யாவற்றையும் உடனடியாக ரத்துச் செய்யுமாறும் கேட்டுள்ளதுடன் தவறும் பட்சத்தில் அரசியல் யாப்பில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment