தேர்தலில் வாக்களிக்கவுள்ளவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றும் அடையாள அட்டை அற்றவர்களுக்கு விசேட தற்காலிக அடையாள அட்டை ஒன்றை வழங்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவ்வடையாள அட்டைகள் நாளை முதல் வினியோகிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.ஜி- தர்மதாச தெரிவித்துள்ளார்.
வாக்களிக்க தகுதிபெற்றுள்ளவர்களில் சுமார் 20 லட்சம்பேர் அடையாள அட்டைகளை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை எனவும், தேவையான ஆவனங்களை பூர்த்தி செய்து கொள்வதில் காணப்படும் குறைபாடுகளும், அதிகாரிகளின் கவலையீனமும் இந்நிலைக்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வழங்கப்படவுள்ள தற்காலிக அடையாள அட்டைகள் எதிர்வரும் ஜனாதிபதி, பொது, மாகாண சபை ஆகிய மூன்று தேர்தல்களுக்கும் செல்லுபடியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் திருத்தச் சட்டங்களின் பிரகாரம் அடையாள அட்டைகள் இல்லாது வாக்களிக்க முடியாது என்பது யாவரும் அறிந்ததாகும்:
0 comments :
Post a Comment