Wednesday, December 30, 2009

அமெரிக்க உளவுத்துறைக்கு ஒபாமா கண்டனம்.

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு நைஜீரிய தீவிரவாதி பற்றிய தகவல்கள் தெரியும். ஆனால் அதை மற்ற துறைகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து உஷார் படுத்த தவறியதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் இதுபற்றி அதிகாரிகளிடம் கூறியதாவது:- நைஜீரிய குற்றவாளியின் தந்தை அந்த நாட்டில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் தன் மகனைப்பற்றி எச்சரித்து இருக்கிறார். ஒரு வாரத்துக்கு முன்பு இந்த தகவல் நம் உளவுத்துறைக்கு கிடைத்து உள்ளது. ஆனால் அவர் பெயர் விமானத்தில் பறக்க கூடாத அளவுக்கு பயங்கரமானவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. உளவுத்துறையின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த தவறு பற்றி விசாரித்து 31-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com