விசேட அதிரடிப்படையினரால் கடத்தப்பட்ட உதவி பொலிஸ் பரிசோதர் குற்றப்புலனாய்வுப் பிரிவில்.
கடந்த இரவு ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டிருந்த கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர், வத்தளையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் உட்பட நால்வரும் குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஐ.எம். கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
இவர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர், இக்குழுவினர் சட்டவிரோத நடவடிக்கை ஒன்றில் இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு ராஜகிரியவில் உள்ள இற்கு இரவுச் சாப்பாட்டுக்குச் செல்வதாக தமது வீட்டிற்கு தெரிவித்துவிட்டு சென்ற குறிப்பிட்ட வர்த்தகர் வீடுதிரும்ப தாமதமாகியதை தொடர்ந்து அவரது கையடக்க தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்திய குடும்பத்தவர்கள் தொலைபேசி அணைக்கப்பட்டிருந்ததை உணர்ந்ததுடன் அவசர பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சிறிது நேரத்தின் பின்னர் அவர்கள் சென்றிருந்த டபிள்கப் வாகனம் பொரளை பாடசாலை ஒன்றிற்கு அருகில் பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment