Tuesday, December 22, 2009

வடக்கின் புகையிரதவீதி அபிவிருத்திக்கு இந்தியா கடனுதவி.

வடமாகாணத்தின் புகையிரதவீதி அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் இலங்கை அரசிற்கு 425 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க முன்வந்துள்ளது. இப்பணம் ஓமந்தை-பளை மற்றும் மடு-தலைமன்னார் ஆகிய இரு புகையிரத வீதிகளுக்குமான தண்டவாளங்களை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இத்தண்டவாளங்கள் அமைக்கும் கொந்தராத்துக்கள் IRCON (India) Ltd. எனும் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 1990 ஆண்டு நொச்சிமோட்டை பாலத்தை புலிகள் தகர்த்ததில் இருந்து வடக்கிற்கான புகையிரத சேவை வவுனியா வரையே இடம்பெற்று வந்தது என்பது யாவரும் அறிந்தது.



No comments:

Post a Comment