Saturday, December 12, 2009

கொந்தராத்துக்களை நிறைவேற்றும் குழுவே எதிர்கட்சி - டியு குணசேகர

பாராளுமன்றில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துபேசிய ஜேவிபி பாராளுமன்ற குழுத்தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, எதிர்கட்சிகளினால் உருவாக இருக்கும் அரசாங்கம் மக்களின் காவலர்களாக அமையும் என தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை தொடர்பாக மகாவலி நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறிய அரசியல் யாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் டியு குணசேகரா எதிர்கட்சிகளின் அரசாங்கம் மக்களின் கொந்தராத்துக்களை பாரமெடுக்கும் அரசாங்கமாகவே அமையும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி மஹிந்த 40 வருட அரசியல் அனுபவம் உள்ள தலைவர் எனவும் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா அரசியலை பாலர் வகுப்பில் இருந்து பயின்று வரவேண்டும் எனவும் தெரிவித்ததுடன் மக்கள் தலைவர்களால் தலைமைதாங்கப்படுகின்ற பாராளுமன்ற நடைமுறைகளை மாற்றியமைப்பதற்கு 40 வருட இராணுவ அனுபவமுள்ள சரத் பொன்சேகாவினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எச்சரித்தார்.

போர்க்காலங்களை நினைவு கூர்ந்த அமைச்சர் போரின்போது மேற்குலகம் எதிர்மறையான அணுகுமுறைகளை மேற்கொண்டாகவும் 3ம் உலகநாடுகளே தமக்கு உறுதியாக இருந்தாகவும் கூறிய அவர் இவ் யுத்தத்தை வெல்வதற்கு பலமான அரசியல் தலைமையே வழியமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment