வலஸ்முல்லப் பிரதேசத்தில் தனது தகப்பனாரின் உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது குழந்தை தவறுதலாக அதை கையாண்டதில் உயிரிழக்க நேரிட்டுள்ளது. காயமடைந்த குழந்தை நேற்று வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதே அங்கு உயிரிழந்துள்ளார்.
குழந்தையின் தந்தைக்கு அத்துப்பாக்கியை வைத்துக்கொள்வற்கான அனுமதி அவரிடம் இல்லை எனவும் அது பல தீய செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் ஐ.எம்.கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment