எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான அடையாள அட்டைகளை சிபார்சு செய்யக்கூடிய அதிகாரிகளின் விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் கேட்டுள்ளனர். தேர்தல் வன்முறைகள் தொடர்பாக முறையிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் தேமிய குறல்லே தேர்தல் ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கண்டி மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகித்தர்கள் மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகித்தர்கள் அனைவரையும் கண்டி மத்திய தபால் நிலைய கேட்போர் கூடத்திற்கு அழைத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஸ்ட அமைச்சர்கள் தேர்தலுக்கான அடையாள அட்டைகள் மேற்படி அதிகாரிகளால் சிபார்சு செய்யப்படமுடியும் என தெரிவித்துள்ளனர். எனவே இவ்விடயம் தொடர்பாக யார் குறிப்பிட்ட தற்காலிக அடையாள அட்டைகளை சிபார்சு செய்ய முடியும் எனும் சுற்றுநிரூபம் ஒன்றை தேர்தல் ஆணையாளர் மூன்று மொழிகளிலும் வெளியிடவேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment