Wednesday, December 16, 2009

மூதூர் கிழக்கு பகுதிகளில் அகதிகளாக இருக்கும் சம்பூர் மக்களுக்கு நிரந்தர குடியிருப்புக்கள்.

சம்பூரில் அகதிகளாக உள்ள மக்களுக்கு காணிகளை வழங்கி அவர்களை மீழ் குடியேற்றுவதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாக கிழக்கு மாகாண ஆளுநர், அமைச்சர் முரளிதரனுக்கு அறிவித்துள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூதூர் சம்பூர், தோப்பூர் கிளிவெட்டி பகுதிகளுக்கு சென்றிருந்த அமைச்சர் முரலிதரன் அகதிகளாக தங்கியிருக்கும் சம்பூர் மக்களை சந்தித்தார். அங்குள்ள மக்கள் மீள் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டியதையடுத்து அமைச்சர் முரளிதரன், பா.உ பசில்ராஜபக்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோருடன் கலந்துரையாடி அம்மக்கள் தாங்கள் விரும்பும் இடங்களில் குடியேற அனுமதி பெறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment