இராணுவத் தலைமையகத்தில் விசேட நடவடிக்கைகளுக்கான இயக்குனராக கடமையாற்றி வந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க யாழ்பாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் உடனடியாக அமுலுக்கு வரும்படியாக இவ் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் யாழ் செல்லும் அவர் யாழ்பாணம் வரணி பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள 52 ம் படையணியில் செயற்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இறுதியாக ஜெனரல் சரத் பொன்சேகாவில் காரியாலயத்தில் செயலாற்றியிருந்தார்.
அதே நேரம் எம்எஸ்டி எனப்படும் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் இயக்குனராக செயற்பட்டுவந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முனசிங்க அவர்கள் அப்பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். அவர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மைத்துனர் என்பதுடன் ஜெனரல் சரத் பொன்சேகா இராஜனாமா கடிதத்தை வழங்கி ஓரிரு தினங்களிலேயே அவரும் பதவியில் இருந்து தூக்கப்பட்டார் என தெரியவருகின்றது.
No comments:
Post a Comment